சோயிப் அக்தரின் அதிவேகபந்துவீச்சு சாதனையை இந்த 2 பவுலர்களால் மட்டுமே முறியடிக்க முடியும் – ஸ்ரீசாந்த் கணிப்பு

Srisanth
- Advertisement -

கொரோனா காரணமாக கலவரையறையின்றி ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். மேலும் உலகஅளவிலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்று தெரியாததால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், நேற்றைய Helo Liveவில் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்:

Srisanth

- Advertisement -

1. அனைவரும் உடற்தகுதியைப் பேணுவது அவசியம். தென்னிந்திய மண்டல பயிற்சி முகாமில் அப்போதையை தலைமை பயிற்சியாளர் சாய் கிருபானி இடம் இருந்து உடற்தகுதியின் முக்கியத்துவத்தை கற்றுக்கொண்டோம். நாங்கள் அந்த நேரத்தில் இருந்து 30 நிமிடங்கள் ஓடுவோம். தினமும் ஓட்டப்பயிற்சி ஈடுபடுவது அனைவருக்கும் நல்லது.

2. போட்டி வேலையாக இருந்து அதுவே என்னுடைய விருப்பமாக (பேசன்) மாறிவிட்டது. எனது அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் 3-5 ஓவர்களில் பந்து வீசச் சொல்வார்கள், ஆனால் நான் 10 க்கும் மேற்பட்ட ஓவர்கள் பந்து வீசுவேன்.

3. விராட் கோலியிடம் ஒரு சிறந்த பணி நெறிமுறை உள்ளது, விராட், குல்தீப் ஆகியோர் மிகவும் ஆக்ரோஷமானவர்கள். ஆனால், நான் கும்ப்ளே பாணியைப் பின்பற்றினேன். எனவே, கட்டுப்பாடான ஆக்ரோஷம் மிகவும் முக்கியமானது.

- Advertisement -

4.கிரிக்கெட் என்பது எங்களுக்கு ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அதுதான் வாழ்க்கை. எனவே, ஆக்ரோஷம் பொதுவானது, அவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள்.

5. பழைய நாட்களில் வாசிம் அக்ரம், பேட்ரிக், யூனிஸ், சோயிப் அக்தர் ஆகியோர் மிகவும் ஆக்ரோஷமான வீரர்களாக இருந்தனர். அவர்கள் குறிக்கோளுடன் பந்துவீசினர். பேட்ஸ்மேனை களத்தில் இருந்து அனுப்புவது அல்லது அவர்களின் வாழ்க்கையிலிருந்து அனுப்பவது.

- Advertisement -

6. அப்போது இந்திய அணியில் ஜவகல் ஸ்ரீநாத், இப்போது பும்ரா அதே பாணியில் பந்துவீசுகிறார்.

7.சோயிப் அக்தரின் அதிவேக சாதனையை பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோரால் முறியடிக்க முடியும். 137 – 145 kmp வேகத்தில் வீசும்போது ஸ்விங் செய்தால் போதும் நீங்கள் காயப்படுவீர்கள். ஒவ்வொரு பந்துக்கும் அந்த வேகமாக வீச தேவையில்லை.

- Advertisement -

Bumrah-2

Umesh-4

8.இன்றைய காலகட்டத்தில் பையனாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாடலாம். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கிரிக்கெட் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.

9.Helo ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்தி, கன்னட பட வசனங்களை பேசி மகிழ்வித்தார்.

10.தோனி எனக்கு உத்வேகம் அளித்துள்ளார். சின்ன தல ரெய்னாவும் சிறந்த வீரர். சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர்.

11.நாளை தனது பிறந்த நாள் கொண்டாட இருக்கும் தனது மகளையும் நேரலையில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

12.கடைசி வரை விட்டுகொடுக்காதீர்கள் போராடுங்கள் என்று கூறி நேரலையை முடித்தார்.

இந்த பதிவில் சோயிப் அக்தரின் அதிவேகப்பந்துவீச்சு சாதனையை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரால் முறியடிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பும்ரா இந்திய அணியின் மூன்று வடிவ போட்டிகளிலும், உமேஷ் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement