ஆமா நான் டிராவிட் கூட சண்டை போட்டேன் தான். அதற்கு காரணம் இதுதான் – ஸ்ரீசாந்த் விளக்கம்

Srisanth-1

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும், 53 ஒருநாள் போட்டிகளிலும், 10 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக கடைசியாக 2011ம் ஆண்டு ஆடினார். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு பிசிசிஐ ஆயுள் தடை விதித்தது.

Srisanth 1

அதன்பின்னர் நீதிமன்றத்தின் மூலம் மேல்முறையீடு செய்து அந்த தடையை 7 ஆண்டுகளாக குறைத்தார். அவரது தடைக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது .இவர் ஸ்பாட்பிக்சிங் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நாளுக்கு, நான்கு நாட்களுக்கு முன்னர் தனது கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளரான பாடி அப்டனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரிடம் தகாத சொற்களையும் பயன்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை முன்னதாக அந்த பயிற்சியாளர் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஏன் அவ்வாறு அப்போது பேசினேன் என்று தற்போது கூறியுள்ளார் ஸ்ரீசாந்த். இதுகுறித்து அவர் கூறுகையில்… நான் ராகுல் டிராவிட்டை தவறாக பேசவில்லை. ஆனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நான் அணியில் இல்லை. இதன் காரணமாக நான் கோபமடைந்தேன். ராகுல் டிராவிட்டிடம் காரணத்தைக் கேட்டேன். ஆனால் அவர் சரியான காரணத்தைக் கூறவில்லை.

Srisanth

சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட விரும்பினேன். அவர்களுக்கு எதிராக வெற்றி பெற விரும்பினேன். ஆனால் என்னை அணியில் சேர்க்கவில்லை. இதன் காரணத்தை அணி நிர்வாகத்திடம் கேட்டேன். அவர்களும் சரியான பதில் அளிக்கவில்லை. அதற்கு முன்னதாக நடந்த போட்டியின்போது தோனியின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தேன்.

- Advertisement -

Srisanth

இதனால் அடுத்ததாக மீண்டும் அவர்களுக்கு எதிராக ஆடுவேன் என்று நினைத்திருந்தேன் .ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த். மேலும் மஞ்சள் நிறத்தில் ஜெர்சி இருந்ததால் நான் சி.எஸ்.கே அணியை ஆஸ்திரேலிய அணி போல பார்க்கிறேன். எனவே அந்த அணியை வீழ்த்தவனேடும் என்றும் நினைத்ததாக ஸ்ரீசாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.