ஸ்ரீசாந்த் கூறியபடி அவரால் 100 விக்கெட்டுகளை வீழ்த்தவே முடியாது – கரெக்ட் ரிப்போர்ட் இதோ

Srisanth
- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்த வழக்கில் தற்போது முடிவு கிடைத்துள்ளது. அதன்படி அவருடைய ஆயுட் காலம் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

Srisanth

- Advertisement -

இதனால் அடுத்த வருடம் 2020 செப்டம்பர் மாதம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஸ்ரீசாந்த் மேலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 100 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதனால் அதனை மட்டும் தனது லட்சியமாகக் கொண்டு மீண்டும் நான் விராட் கோலி அணியில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.

இந்நிலையில் ஸ்ரீசாந்தின் இந்த ஆசை நிறைவேறுமா என்று பார்த்தால் அது மிகவும் கடினம்தான். ஏனெனில் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் யாரும் நேரடியாக விளையாடிய முடியாது. உள்ளூர் போட்டியில் அவர் திறமையை நிரூபிக்க வேண்டும். மேலும் அதன்பிறகு நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து உள்ளூர் மற்றும் இந்திய ஏ அணிகளுக்காக சிறப்பாக ஆடினால் மட்டுமே தேர்வாளர்களின் கவனத்திற்கு அவரது தேர்வு செல்லும்.

Sreesanth 1

அப்படி தேர்வாளர்கள் மீது அவரது பார்வை பட்டால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தற்போது 36 வயதாகும் இவர் 2021ல் 38 வயது ஆகி விடும். அதற்குள் அவர் இதனை செய்ய வேண்டும். அப்படி செய்வது மிகவும் கடினம் ஏனெனில் தற்போது இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் பந்துவீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே ஸ்ரீசாந்த் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது எட்டாக்கனியாகவே உள்ளது என்பதே மறுக்கப்படாத உண்மை ஆகும்.

Advertisement