எனக்கு 37 வயசு தான் ஆகுது. இன்னும் 5 வருஷம் என்னால் விளையாட முடியும் – நம்பிக்கை அளித்த இந்திய நட்சத்திரம்

2007
- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது சூதாட்ட புகாரில் சிக்கி ஆயுட்கால தடை பெற்றார் ஸ்ரீசாந்த். அதன் பின்னர் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் நீதிமன்றத்தை நாடி தற்போது குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகியுள்ளார் ஸ்ரீசாந்த்.

Srisanth 1

- Advertisement -

தற்போது அவருக்கு 37 வயதாகிவிட்டது. இதன் காரணமாக எப்படியாவது மீண்டும் கிரிக்கெட் அரங்கில் சர்வதேச அளவில் விளையாட விட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். இதற்காக என்பிஏ கூடைப் பந்தாட்டத்தின் ஜாம்பவான் ஒருவரிடம் மனநிலை பயிற்சிகளை வாரத்திற்கு மூன்று முறை, மூன்று மணிநேரம் வீதம் ஆலோசனைகளை பெற்று வருகிறார்.

மேலும் கேரள ரஞ்சி கோப்பை அணியினருடன் 1:30 முதல் சாயங்காலம் 6.30 மணி வரை தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரது பெயர் ரஞ்சிக் கோப்பை அணியில் அறிவிக்கப்பட்டவுடன் மிகக் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார் ஸ்ரீசாந்த். எப்படியாவது ஐபிஎல் தொடரிலும் ஆடி விடுவேன் என்று பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் …

நான் பயத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று நினைக்கிறேன். மீண்டும் எப்படியாவது ஐபிஎல் தொடர்களில் எனது பெயரை இடம் பெறச் செய்வேன். ஒரு நாளிற்கு 12 ஓவர்கள் வீசி பயிற்சி செய்து வருகிறேன். முதல் பாதியில் சிவப்பு பந்திலும் இரண்டாவது பாதியில் வெள்ளை பந்திலும் பயிற்சி செய்து வருகிறேன்.

- Advertisement -

நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து விட்டேன் ஆனால். களத்தில் விளையாடும்போது மக்கள் என்னை எப்படிப் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. இதுதான் பயமாக இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் யார் யார் குற்றம் செய்தார்கள் என்ற உண்மை வெளிவரும். அப்போது மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பல ஜாம்பவான்கள் பிடிபடுவார்கள் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார்.

Srisanth

ஸ்ரீசாந்த் இவருக்கு தற்போது 37 வயதாகிறது . இந்திய அணி 2007ம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளை வென்ற போது இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஸ்ரீசாந்த். மேலும் தனக்கு 37 வயதுதான் ஆகிறது என்பதால் மேலும் 5 ஆண்டுகள் வரை விளையாடலாம் என்றும் கிரிக்கெட்டிற்கு வயது ஒரு தடையல்ல என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

Advertisement