தோனி குறித்து பேச இவருக்கு எந்த தகுதியும் இல்லை. இங்கி வீரரை நேரடியாக விமர்சித்த – ஸ்ரீசாந்த்

Srisanth
- Advertisement -

கொரோனா காரணமாக கலவரையறையின்றி ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். மேலும் உலகஅளவிலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்று தெரியாததால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், நேற்றைய Helo Liveவில் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்:

Srisanth

1) மும்பை அணி 2020ல் ஐ.பி.எல் டி20 லீக் கோப்பையை கைப்பற்ற வேண்டும்.

- Advertisement -

2) ஆலன் டொனால்ட் மிகச்சிறந்த வீரர் ஆனால் அவரின் திறமை மிகவும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.

3) சிறந்த ஒருநாள் லெவன் அணி:

- Advertisement -

1)கங்குலி, 2)சச்சின், 3)லாரா, 4)கோலி, 5)டிவில்லியர்ஸ், 6)யுவ்ராஜ், 7)தோனி, 8)வார்னே, 9)காலீஸ், 10)ஆலன் டொனால்ட், 11)மெக்ரத்

4) சச்சின்,டிராவிட் ஆகியோர் 41 வயது வரை விளையாடினார்கள் தோனிக்கு 38 வயதுதான் ஆகிறது. அவர் மிகவும் உடல்தகுதியுடன் உள்ளார். எனவே அவர் இன்னும் 2 மற்றும் 3 வருடங்கள் விளையாடலாம்.

- Advertisement -

5) பென் ஸ்டோக்ஸ் கடந்த 5-6 வருடங்கள் தான் கிரிக்கெட் விளையாடுகிறார் அவருக்கு தோனியை பற்றி பேச தகுதியில்லை.

6) ராபின் உத்தப்பா எனக்கு மிகச்சிறந்த நண்பர் 2007ல் நான் கேரளாவுக்காக விளையாடிய போது அவரின் கேட்சை பிடித்தது மறக்கமுடியாதது ஒன்று.

- Advertisement -

7) நான் விளையாடியதை நிறுத்திய பிறகு தான் டிவில்லியர்ஸ் Mr.360 ஆனார்.

மேலும் அனைவருக்கும் தமிழில் நன்றி கூறினார்.

ஸ்ரீசாந்த் அளித்துள்ள இந்த கருத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அனுபவங்கள் குறித்து எழுதியுள்ள புத்தகத்தில் தோனி குறித்து சர்ச்சையான கருத்தினை பதிவிட்டுருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்ரீசாந்த் தோனி குறித்து கருத்தினை தெரிவிக்க அவருக்கு தகுதி இல்லை என்றும் ஸ்டோக்ஸ் 5-6 வருடமாக தான் கிரிக்கெட் விளையாடுகிறார். அவருக்கு தோனியின் அனுபவம் இல்லை என்றும் அவரை பற்றி பேச தகுதி இல்லை என்றும் நேர்பட தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Advertisement