தோனி இந்த ஒரு விடயத்தில் யார் பேச்சையும் கேட்க மாட்டார். அதுதான் தோனி – ஸ்ரீனிவாசன் பேட்டி

Srinivasan

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து கேப்டனாக இருக்கிறார் மகேந்திர சிங் தோனி, அவர் அந்த அணியின் கேப்டனாக மட்டும் இருப்பதில்லை, அவரைச் சுற்றி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இயங்குகிறது, அவர் சொல்வதே அந்த அணியின் வேத வாக்கு. அவர் கூறிவிட்டால் யாரையும் அணியில் இருந்து நீக்கலாம், யாரையும் அணியில் சேர்க்கலாம். அந்த அளவிற்கு அணியை கட்டுக்குள் வைத்திருக்கிறார் தோனி.

csk

இந்நிலையில் தற்போது இணையவழி பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தோனி குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். கேப்டனாக தோனியின் அணுகுமுறை பற்றி பேசியுள்ளார் .அவர் கூறுகையில்…

நான் ஒருமுறை தோனியிடம் சென்று, நான் நமது அணிக்காக ஒரு மிகச் சிறந்த வீரரை தேர்வு செய்து வைத்திருக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், இவர் நமது அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார். அணியை சீரழித்து விடுவார் என்று வெளிப்படையாகக் கூறினார் தோனி. அதேபோல் பந்து வீச்சாளர்களுக்கு பேட்ஸ்மேன்களின் வீடியோக்களை அவ்வப்போது காட்ட வேண்டும்.

CSKShop

அதனை வைத்து அவர்களின் திறமையை ஆராய்ந்து பலம் என்ன பலவீனம் என்ன என்பது உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் பந்து வீச வேண்டும் என்று பயிற்சியாளர்கள் கூறுவார்கள். ஆனால் தோனி அதையெல்லாம் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார். போட்டி நடக்கும் போது அவர் உள்ளுணர்வில் என்ன தோன்றுகிறதோ அதைத் தான் செய்வார்.

- Advertisement -

csk vs dc

அதை வைத்துதான் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவார். மேலும் தோனியின் அணித்தேர்வில் யாரும் தலையிடக்கூடாது. அந்த ஒரு விடயத்தில் தோனி எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார். அதுவே அவரின் வெற்றியின் ரகசியமாகவும் மாறியுள்ளது அப்படிப்பட்ட வீரர் தோனி என்று பெருமையாக பேசி உள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.