இவர்கள் இருவரும் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றே நான் சீக்கிரம் ஓய்வு பெற்றேன் – ஸ்ரீநாத் ஓபன் டாக்

Srinath
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத். 1991 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் 2003ம் ஆண்டு வரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்து சர்வதேச அளவில் 500+ விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளிலும் 229 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Srinath 1

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 315 விக்கெட்டுகளையும் சாய்த்து உள்ளார். அந்த காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறை இருந்ததால் கபில்தேவிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே அவர் கருதப்பட்டார். ஆனால் 2003 ஆம் ஆண்டு வெகு சீக்கிரத்தில் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அதற்கான காரணம் என்ன என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீநாத். அவர் கூறுகையில்… எனது கைகளும், கால் முட்டியும் சோர்ந்து விட்டன. அந்த நேரத்தில்தான் ஜாகிர்கான், ஆசிஸ் நெஹரா ஆகியோர் இளம் வீரர்களாக இந்திய அணிக்கு கிடைத்தனர். நான் விளையாடிக் கொண்டிருக்கும் போது இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைத்தது.

கபில் தேவ் மற்றும் மனோஜ் பிரபாகர் ஆகியோர் அணியில் இருந்த போது எனக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. இதன் காரணமாக நான் எனது இளம் வீரர்களான ஜாகிர் கான் மற்றும் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு வழிவிட வேண்டும் என்று நினைத்தேன். மேலும் இந்திய ஆடுகளங்களில் நான் பந்து வீசுவதும் கடினமாக மாறியது. எனக்கு 33 வயதாகி இருந்தது.

- Advertisement -

ஆனால் இன்னும் இரண்டு வருடங்கள் விளையாடி இருக்கலாம். எனது மூட்டுவலி பிரச்சினை தீவிரமடைந்தது. அந்த நேரத்தில் இந்திய அணியில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். வெங்கடேஷ் பிரசாத் 6 வருடங்கள் இருந்தார். இப்படி வீரர்கள் மாறிக் கொண்டே இருந்தனர்.
இப்படி இருந்தால் அணியின் பந்துவீச்சு திறன் குறையும்.

ZaheerKhan

இதன்காரணமாக ஜாகிர் கான் மற்றும் ஆசிஸ் நெஹ்ரா ஆகியோர் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்று நான் வெகு சீக்கிரத்தில் ஓய்வு பெற்றேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீநாத்.

Advertisement