ஸ்கூல் கிரிக்கெட்ல விளையாடுற மாதிரி இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் திறன் இவரிடம் உள்ளது – ஸ்ரீநாத் பேட்டி

Srinath

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 16 வருடங்கள் விளையாடியிருக்கிறார். கங்குலியின் தலைமையில் கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமான தோனி, விராட் கோலியின் தலைமையில் கடந்த 2019ஆம் ஆண்டு கடைசியாக விளையாடினார். இந்த காலகட்டத்திற்குள் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து இருக்கிறார்.

dhoni

குறிப்பாக இவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய துறைகளை விட ஒரு போட்டியை எவ்வாறு கணிக்கிறார் என்ற திறமை தோனிக்கு மிகவும் அதிகம். இதைப்பற்றித்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சிலாகித்து பேசிக் கொண்டிருப்பார்கள்.இந்நிலையில் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தோனி கிரிக்கெட் அறிவு குறித்து பேசியிருக்கிறார்.

மேலும் அவரை, அவர் ஒரு கிரிக்கெட் யோகி என்றும் பேசியிருக்கிறார். ரவிசந்திரன் அஸ்வின் யூட்யூப் தளத்திற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது… 2003 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் மற்றும் கென்யா ஆகிய மூன்று ஏ அணிகள் இடையே ஒரு முத்தரப்பு தொடர் நடந்தது. அப்போதுதான் தோனியை நான் முதன்முதலில் சந்தித்தேன். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தனி ஆளாக நின்று இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பள்ளி கிரிக்கெட்டில் எப்படி ஆடுவாரோ அதே போல் அனைத்து பந்துவீச்சாளர்களை ஆடி சிதறடித்தார். தோனி. ஒரு கிரிக்கெட் யோகி அதனால்தான் கிரிக்கெட் போட்டிகளையும் மிகவும் சரியாகவும் துல்லியமாகவும் கணிக்கிறார்.

- Advertisement -

Dhoni

இதனால்தான் அவர் பல கோப்பைகளை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், அப்படி வெற்றி பெற்றுவிட்டு மற்றவர்களின் கையில் கொடுத்து கொண்டே மிகவும் சாதாரணமாக ஒன்றும் நடக்காதது போல் சென்று கொண்டிருப்பார். இதனால் தான் அவரை நான் கிரிக்கெட் யோகி என்று கூறுகிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜவகல் ஸ்ரீநாத்.