இலங்கைக்கு வாருங்கள், கோலி அனுஷ்கா சர்மாவுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் …ஏன் தெரியுமா !

dhayasri
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. இவர் பாலிவுட் முன்னனி நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து  திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் திருமணம் முடிந்தபின்னர் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்பொழுது காதல் கணவன் விராட்கோலியுடன் அனுஷ்கா சர்மாவும் தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றிருந்தார்.

kohli

- Advertisement -

இந்நிலையில் இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இந்த தொடரில் விராட்கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஓய்வில் உள்ள கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார்.இந்நிலையில் இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சரான தயஸ்ரீ ஜெயசேகரா கோலி தன்னுடைய மனைவியுடன் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

dayasiri

இலங்கையின் சிறப்பு விருந்தினராக கோலி வர தயாராக இருந்தால் கோலி சுற்றிப் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரவும் ரெடியாக இருப்பதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement