201 ரன்ஸ்.. வினோதமான உலக சாதனையை சமன் செய்த இலங்கை.. நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி

SL vs NED
- Advertisement -

ஐசிசி 2024 20 உலகக் கோப்பையில் ஜூன் 17ஆம் தேதி செயின்ட் லூசிய நகரில் 38வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் கிரிக்கெட் மோதின. அந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 20 ஓவரில் 201/6 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அசலங்கா 46, குசால் மெண்டிஸ் 46 ரன்கள் எடுத்த நிலையில் நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 202 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இலங்கை அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது. அந்த வகையில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 16.4 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

ஆறுதல் வெற்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்காட்எட்வர்ட்ஸ் 31, மைக்கேல் லேவிட் 31 ரன்கள் எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக நுவான் துசாரா 3, கேப்டன் ஹசரங்கா 2, மதீஸா பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய 2வது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

அதை விட இப்போட்டியில் 201/6 ரன்கள் குவித்த இலங்கைக்கு நிஷாங்கா 0, குசால் மெண்டிஸ் 46, கமிண்டு மெண்டிஸ் 17, டீ சில்வா 34, அசலங்கா 46, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 30*, ஹஸரங்கா 20* ரன்கள் எடுத்தனர். ஆனால் யாருமே 50 ரன்கள் தாண்டி அரை சதமடிக்கவில்லை. இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அரை சதம் அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற வினோதமான உலக சாதனையை இலங்கை சமன் செய்தது.

- Advertisement -

இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஒரு சதம் கூட அடிக்காமல் 201/7 ரன்கள் குவித்து அந்த சாதனையை படைத்துள்ளது. அத்துடன் இந்த தொடரில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த இலங்கை 4 போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகளை பெற்றது.

இதையும் படிங்க: சூப்பர் 8 சுற்றுக்கு அவரை கொண்டு வாங்க.. விராட் கோலிக்கு பதிலா அவர்தான் ஓப்பனிங் பண்ணனும் – இங்கிலாந்து வீரர் கருத்து

அதனால் குரூப் டி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து தப்பிய இலங்கை 3வது இடத்தைப் பிடித்தது. மொத்தத்தில் 2014 டி20 உலகக் கோப்பையை வென்ற முன்னாள் சாம்பியனான இலங்கை இந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் இந்த போட்டியில் நெதர்லாந்தை தோற்கடித்த இலங்கை ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பியது.

Advertisement