- Advertisement -
ஐ.பி.எல்

சன் ரைசர்ஸ் அணி 500 ரன்கள் அடிச்சா தான் ஜெயிக்க முடியும்.. காரணத்துடன் விமர்சித்த – சீக்கா ஸ்ரீகாந்த்

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக உள்ளூர் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்த இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

சன் ரைசர்ஸ் அணியை விமர்சித்த சீக்கா ஸ்ரீகாந்த் :

அவரது தலைமையின் கீழ் தற்போது நடைபெற்று வரும் 2006 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் பந்துவீச்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் மூன்று தோல்விகளை பெற்று தற்போது பின்னடைவை சந்தித்துள்ளனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக மூன்று ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் அவர்கள் அடித்திருந்தாலும் பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து அவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இப்படி பேட்டிங்கில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் பந்துவீச்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் அணியின் மீது பல்வேறு விமர்சனங்களும் இருந்து வருகின்றன.

கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 219 ரன்கள் அடித்தாலும் பஞ்சாப் அணி அதை 18.5 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. இப்படி சன்ரைசர்ஸ் அணியின் மோசமான நிலைமை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கூறுகையில் : ஹைதராபாத் அணி தற்போது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆட்டமிழந்து வெளியேறியதும் ஹெல்மெட்டை கழட்டி எறிந்த விராட் கோலி.. எதற்கு தெரியுமா? – விவரம் இதோ

ஆனால் அவர்கள் 300 ரன்கள் அடித்தால் கூட அவர்களது பந்து வீச்சாளர்கள் அதனை வழங்கிடுவார்கள். எனவே 300 ரன்கள் அடித்தாலும் அந்த அணியால் வெற்றி பெற முடியாது. என்னை பொறுத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற வேண்டுமெனில் 500 ரன்கள் அடித்தால் தான் வெற்றிக்கு வாய்ப்பு என்று அவர்களை விமர்சித்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -