தோனியின் வாய்ப்பு மங்கிவிட்டது. தோனியின் பொறுப்பு இனி இவருக்கு தான் – ஸ்ரீகாந்த் கணிப்பு

Srikkanth
- Advertisement -

இந்திய அணியில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டனாக மாறியவர் விராட் கோலி. அதன் பின்னர் தொடர்ச்சியாக இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் கோலி பல்வேறு சாதனைகளை கேப்டனாக படைத்துள்ளார். முக்கிய ஐசிசி தொடர்களை இந்திய அணி அரையிறுதிப் போட்டிகளில் இழந்தாலும் மற்றபடி பல தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

Kohli-1

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி கணிசமாக வெற்றிகளைக் பெற்றது. கோலியின் தலைமையில் உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் மட்டுமே பாக்கி உள்ளது.

அதனை மட்டும் விராட் கோலி செய்துவிட்டால் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் வரிசையில் இடம் பெறுவார் என்பது நிச்சயம் உண்மைதான். இந்நிலையில் தற்போது விராட் கோலி கேப்டனாக இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டனாக பார்க்கும்போது எனக்கு கபில் தேவ் தான் நியாபகத்துக்கு வருகிறார்.

Kapil-Dev

ஏனெனில் நான் கபில் தேவ்வுடன் விளையாடி உள்ளேன். அதனால் கபில் தேவ் குறித்தும், அவரது கேப்டன்சி குறித்தும் நான் முழுமையாக அறிந்துள்ளேன். அதேபோன்று கோலியையும் நான் நன்றாக அறிவேன். கோலி வெற்றிக்காக முழு நம்பிக்கை வைத்து ஆடுகிறார். கபில் தேவ் போட்டியின் வெற்றி மீது வைத்திருந்த நம்பிக்கையை கோலி அப்படியே வைத்துள்ளார் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து தோனி குறித்து பேசிய ஸ்ரீகாந்த் கூறுகையில் : இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெறவில்லை என்றால் தோனியின் வாய்ப்பு இந்திய அணியில் முற்றிலும் மங்கிவிடும். நான் எதிர்மறையாக கூறுவதாக நினைக்க வேண்டாம். நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் பணியாற்றி உள்ளேன். அதனால் இப்போது ஒரு தேர்வாளர் மனநிலையில் இதனை நான் கூறினேன் என்று குறிப்பிட்டார்.

மேலும் தோனிக்கு பதிலாக இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரலேயாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுலை தேர்வு செய்யலாம். தோனிக்கு பதில் என்னுடைய முதல் தேர்வு ராகுல் தான். அவர் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் இறங்கலாம் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement