கங்குலியை விட இவர்தான் கேப்டன்சியில் சிறந்தவர். புள்ளிவிவரத்துடன் புட்டு வைத்த – ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

Ind

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நடத்திய கிரிக்கெட் கனெக்ட் எனும் நிகழ்ச்சியில் கம்பீர், சங்ககாரா, ஸ்மித் ஆகியோருடன் பேசிய இந்திய முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்த வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் பல்வேறு கிரிக்கெட் விடயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறந்த கேப்டன் யார் என்ற விவாதம் நடைபெற்றது.

Ganguly-dhoni

அப்போது கங்குலியா அல்லது தோனியா என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஸ்ரீகாந்த் கங்குலி ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மென் மற்றும் கேப்டன் ஆவார். இவர் எதிரணியை அந்த நாட்டில் சென்று பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவ.ர் ஆனால் தோனி கேப்டனாக இருந்தபோது இந்தியாவில் பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் வெற்றி பெற்றுக்கொடுத்த தோனிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Dhoni

அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்று கொடுத்துள்ளதால் தோனி ஒரு சிறந்த கேப்டன் என்றும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இவரது இந்த கருத்துக்கு சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன .ஏனெனில் கங்குலியை விட தோனி சிறந்த கேப்டன் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். தோனி எப்படி பார்த்தாலும் சிறந்த கேப்டன் என்றாலும் கங்குலியே அணியை கட்டமைத்தவர் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement