இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சமபலம் வாய்ந்த இரு அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்த காத்திருப்பதனால் இந்த போட்டியானது பலரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறுதிப்போட்டியில் அசத்தப்போகும் 2 இந்திய வீரர்கள் : ஸ்ரீகாந்த் கணிப்பு
இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் சிறப்பாக செயல்படப்போகும் இந்திய வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்த இறுதிப்போட்டியில் அசத்தப்போகும் இந்திய பேட்ஸ்மேன் மற்றும் இந்திய பவுலர் என இருவரது குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி மெதுவாக பந்துவீசி ஜாஸ் பட்லரை வீழ்த்தியது போன்று மீண்டும் பந்துவீச வேண்டும். பட்லருக்கு எதிராக அவர் வீசிய பந்து மிகச் சிறப்பாக இருந்தது. எனவே அதேபோன்று மெதுவாக பந்துவீச வேண்டும். பந்துக்கு வேகம் கொடுத்தால் பேட்ஸ்மேன்களுக்கு அடிக்க வாய்ப்பாக அமையும். ஆனால் வேகத்தை குறைத்து காற்றில் பேட்ஸ்மேனை வீழ்த்தினால் நிச்சயம் உங்களுக்கு விக்கெட் கிடைக்கும்.
கடந்த இரண்டு போட்டிகளாகவே வருண் சக்கரவர்த்தி சுமாராக பந்து வீசியிருந்தாலும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். அதேபோன்று அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாட வேண்டும் என்று தனக்குத்தானே அழுத்தத்தை உருவாக்கி கொள்கிறார். அவர் இன்னும் பார்ம் அவுட் ஆகவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கூட 50 ரன்கள் அடித்திருந்தார்.
இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் சதமடிக்க சஞ்சு சாம்சன் இதை செய்தால் மட்டும் போதும் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
எனவே ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும் வரை அமைதியாக இருந்து அதன்பின்னர் அவர் சுதந்திரமாக விளையாட வேண்டும். நிச்சயம் போட்டியின் ஆரம்பத்தில் சற்று நிதானித்து அதன்பின்னர் அவர் அதிரடியை கையில் அடித்தால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார். அவருடைய மனநிலையில் சிறிய மாற்றம் செய்தாலே ரன் தானாக வரும் என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.



