கேப்டனாக கோலியை இவர் ஒருவருடன் மட்டுமே ஒப்பிட முடியும் – தமிழக வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி

Srikkanth
- Advertisement -

இந்திய அணியில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டனாக மாறியவர் விராட் கோலி. அதன் பின்னர் தொடர்ச்சியாக இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் கோலி பல்வேறு சாதனைகளை கேப்டனாக படைத்துள்ளார். முக்கிய ஐசிசி தொடர்களை இந்திய அணி அரையிறுதிப் போட்டிகளில் இழந்தாலும் மற்றபடி பல தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

Kohli-1

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி கணிசமாக வெற்றிகளைக் பெற்றது. கோலியின் தலைமையில் உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் மட்டுமே பாக்கி உள்ளது.

அதனை மட்டும் விராட் கோலி செய்துவிட்டால் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் வரிசையில் இடம் பெறுவார் என்பது நிச்சயம் உண்மைதான். இந்நிலையில் தற்போது விராட் கோலி கேப்டனாக இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டனாக பார்க்கும்போது எனக்கு கபில் தேவ் தான் நியாபகத்துக்கு வருகிறார்.

Kapil-Dev

ஏனெனில் நான் கபில் தேவ்வுடன் விளையாடி உள்ளேன். அதனால் கபில் தேவ் குறித்தும், அவரது கேப்டன்சி குறித்தும் நான் முழுமையாக அறிந்துள்ளேன். அதேபோன்று கோலியையும் நான் நன்றாக அறிவேன். கோலி வெற்றிக்காக முழு நம்பிக்கை வைத்து ஆடுகிறார். கபில் தேவ் போட்டியின் வெற்றி மீது வைத்திருந்த நம்பிக்கையை கோலி அப்படியே வைத்துள்ளார்.

- Advertisement -

களத்தில் எப்போதும் ஆக்ரோஷம் என்பது தேவையான ஒன்று தான் அதை கோலி சரியான வழியில் கொண்டு செல்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவின் முன்னாள் வீரரான லஷ்மணன் கூறுகையில் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றால் அவரின் ஆக்ரோஷம் தான். ஆனால் அது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செல்கிறது அது தனக்கு கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

Kohli

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வரும் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் 3 வடிவ கிரிக்கெட்டிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் 11867 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7240 ரன்களையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement