இவர் ஓப்பனிங் பண்ண செட் ஆகமாட்டார். என் முடிவு இதுதான் – ஸ்ரீகாந்த் ஓபன் டாக்

Srikkanth

இந்திய அணிக்கு கடந்த பல வருடங்களாக துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்தியாவின் சிறப்பான துவக்க வீரர்கள் என்று அவர்கள் நிரூபித்து இருந்தாலும் தற்போது தவான் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார்.

dhawan 1

டி20 போட்டிகளில் கடந்த ஆண்டு அவரது ஆட்டம் மிக மோசமாக அமைந்தது. ரன்களை தொடர்ந்து குவிக்க தவறியது மட்டுமின்றி ஸ்ட்ரைக் ரேட் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே இந்த வருட டி20 உலகக் கோப்பை தொடருக்கு தவானை அணியில் சேர்க்க வேண்டாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் ஐ.சி.சி தொடர்களில் அசத்தும் தவான் இந்த வருடமும் உலகக்கோப்பையில் துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியதாவது : தவான் ஒரு நல்ல ஆட்டக்காரர் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் டி20 வடிவத்திற்கு தற்போதுள்ள நிலையில் தவான் தயாராக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் தவானுக்கு பதிலாக ஓபனிங் விளையாடிய ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார்.

Rahul

மேலும் டி20 போட்டிகளில் அவரது புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே அவரது திறமை குறித்த தெளிவு நமக்கு கிடைக்கும். ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் அடித்து ஆடக்கூடிய துவக்க வீரர் வேண்டுமென்றே நான் நினைக்கிறன். நான் தேர்வுக்குழுவில் இருந்திருந்தால் கண்டிப்பாக உலக கோப்பை அணியில் துவக்க வீரராக ராகுலை தான் தேர்வு செய்வேன் என்னுடைய முதல் தேர்வு அதுதான் என்று ஸ்ரீகாந்த் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Rahul

தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய போது அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் ஆடிய கடந்த சில தொடர்களாகவும் துவக்க வீரராக அவரது அதிரடி மற்றும் ரன் குவிப்பு ஆகிய இரண்டும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.