நாடு திரும்பும் முன் நள்ளிரவு 12.30மணிக்கு மீட்டிங்கை போட்ட விராட் கோலி – பீல்டிங் பயிற்சியாளர் பேட்டி

Sridhar
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சின் போது 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்தியா அடைந்த இந்த தோல்வியை அடுத்து பலரும் இந்திய அணியை விமர்சித்தனர். மேலும் முதல் போட்டியை இழந்த இந்திய அணி மீதமுள்ள போட்டிகளையும் இழந்து 4-0 என்ற கணக்கில் வெளியேறும் என்றும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

Ind

- Advertisement -

ஆனால் இந்திய அணி சிறப்பாக விளையாடி முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்த கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் முக்கியமான அந்த முதல் போட்டியில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டம் இழந்த அன்று இரவு என்ன நடந்தது என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தமிழக வீரரான அஸ்வின் நடந்த உரையாடலில் பல முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது :

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு அன்று இரவு 12.30 மணிக்கு விராட் கோலியிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என கேட்டிருந்தார். நான் ரவிசாஸ்திரி, விக்ரம் ரத்தோர், பரத் அருண் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என பதிலளித்தேன். அதற்கு கோலி நானும் வருகிறேன் என்று பதிலளித்திருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சிறிது நேரத்தில் விராட் கோலியும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்.

sridhar 1

அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வது குறித்த ஆலோசனைகளைக் கூறினார். இந்த தோல்வியை வெற்றிகரமாக மாற்ற சில முக்கிய தகவல்களை ரவிசாஸ்திரி வழங்கிக் கொண்டே இருந்தார். பின்னர் அன்று இரவு முழுவதும் பலகட்ட ஆலோசனைகள் நடந்து கொண்டே இருந்தது. மேலும் இந்தியா திரும்புவதற்கு முன்னர் கோலி இந்திய அணியை எவ்வாறு மனரீதியாக உற்சாகப்படுத்தி தொடரை அணுக வைக்க வேண்டும் என்று தனது யோசனைகளை வழங்கினார்.

Rahane

மறுநாள் காலை கேப்டன் ரகானேவை அழைத்து சிறப்பான திட்டங்கள் மற்றும் வெற்றிக்கான யூகங்கள் என அனைத்தையும் அவரிடம் கலந்துரையாடினார். அந்த தருணம் மிக அற்புதமாக இருந்தது. மேலும் நாடு திரும்புவதற்கு முன்னர் கேப்டன் விராட் கோலி அனைத்து வீரர்களும் தனித்தனியே ஆலோசனைகளை நடத்தி தொடரை எந்தவித அழுத்தமும் இன்றி சிறப்பாக அணுகுவதற்கான அனைத்து யோசனைகளில் கூறிவிட்டே இந்தியா திரும்பினார் என பல முக்கிய நிகழ்வுகளை ஸ்ரீதர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement