ரஹானே ஸ்லிப்பில் கேட்ச் தவறவிடுவதற்கு இதுதான் காரணம் – பீல்டிங் பயிற்சியாளர்

Sridhar
- Advertisement -

நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தாலும் இந்த தொடரில் இந்திய அணியின் பீல்டிங் சற்று மோசமாகவே இருந்தது என்று கூறலாம். இந்திய வீரர்கள் அதிகப்படியான கேட்சிகளை இந்த தொடரில் தவறிவிட்டனர்.

IND

குறிப்பாக ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ரஹானே, கோலி, ரோகித் ஆகியோரும் சில கேட்சிகளைத் தவிர விட்டனர். மிகச் சிறந்த பீல்டர்கள் ஆகிய இவர்கள் இந்த தொடரில் சற்று தடுமாற்றத்தை கண்டனர். இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ரஹானேவின் பீல்டிங் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பொதுவாக ரஹானே கேட்சிகளை விடக்கூடிய வீரர் கிடையாது.

- Advertisement -

உலக கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்களில் அவரும் ஒருவர் இருப்பினும் இந்த போட்டியில் அவர் ஸ்லிப் பகுதியில் ஏற்பட்டதற்கான காரணத்தை நாங்கள் தற்போது கண்டறிந்துள்ளோம். அதன்படி தொடர்ச்சியாக அஸ்வின் பந்து வீசும்போது ஸ்லிப்பகுதிகளில் அதனை சரியாக பிடித்து வந்த ரஹானே இந்த தொடரில் கேட்ச்களை தவறவிட்டதற்கு காரணம் யாதெனில் இந்தூர் மைதானத்தில் அதிகப்படியான பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவை இருந்தன அதனால் பந்து வழக்கத்தை விட சற்று வேகமாக இருந்தது.

Rahane

அதுமட்டுமின்றி ரஹானே ஸ்லிப்பில் நிற்கும் வழக்கமான தூரத்தை விட இந்த தொடரில் சற்று முன் சென்று நின்றார். எனவே பந்து வேகமாகவும் சற்று உயரமாகவும் வருவதால் அவரால் கேட்ச் செய்ய முடியாமல் தவறவிட்டார். ரஹானேவின் இந்த மாற்றத்தை நாங்கள் தற்போது சோதனையில் வைத்துள்ளோம் இனிவரும் தொடர்களில் இதற்கு தனியாக பயிற்சி அளிக்கவும் இருக்கிறோம் என்றும் ஸ்ரீதர் கூறினார்.

Advertisement