ஜிபிஎஸ் கருவியின் மூலம் கண்காணிக்கப்படும் இலங்கை அணி – ஏன் தெரியுமா

gps
- Advertisement -

தற்போது நடைபெற்றுவரும் நிடாஸ்கோப்பையில் இலங்கை அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகின்றது.ரூபாய் 75ஆயிரம் அமெரிக்க டாலர்களை இதற்காக மட்டும் ஒதுக்கியுள்ளதாம் இலங்கை.இந்த ஜிபிஎஸ் மூலம் இலங்கை வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் ஓய்வறையில் அமர்ந்துகொண்டே பயிற்சியாளர்களால் கண்காணிக்க முடியுமாம்.

srilanka

- Advertisement -

ஒவ்வொரு வீரரின் முதுகு புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய கருவியின் மூலம் அணிவீரர்கள் எவ்வளவு தூரம் ஓடுகின்றார்கள் எவ்வளவு நேரம் மைதானத்தில் தாக்குபிடிக்கின்றார்கள் எப்படி பந்துவீசுகிறார்கள் போன்ற பலதகவல்களை அறிந்துகொள்ள முடியுமாம்.

இந்த புதிய திட்டத்தை இலங்கை அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான நிக்போத்தாஸ் தான் செயல்படுத்தியுள்ளாராம்.இதற்கு முன்னர் இந்த திட்டம் பார்சிலோனா கால்பந்தாட்ட அணிக்கு தான் முதல் முதலில் செயல்படுத்தி பார்க்கப்பட்டதாம்.

ramith

அடுத்த உலகக்கோப்பைக்காக இலங்கை தங்களது வீரர்களை தயார் படுத்திடவே இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement