76 போட்டிகளில் முதல் முறை.. குஜராத்தின் ஆறுதலை கலைத்த மழை.. ஹைதராபாத் தகுதி.. 2வது இடத்தை பிடித்ததா?

SRH vs GT
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதெராபாத் நகரில் 66வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய குஜராத் அணியை ஹைதராபாத் தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அதில் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் ஹைதராபாத் களமிறங்கியது.

ஆனால் மாலை 6:00 மணி முதல் ஹைதராபாத் நகரில் மழை வெளுத்து வாங்கியதால் இப்போட்டி தூங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் வீசுவதற்காக 2 அணி கேப்டன்களும் நடுவர்களும் காத்திருந்தனர். இருப்பினும் யாருக்கும் கரிசனம் காட்டாத மழை தொடர்ந்து ஜோராகப் பெய்து ஹைதராபாத் மைதானத்தை முழுவதுமாக தண்ணீரால் நிரப்பியது.

- Advertisement -

ஹைதெராபாத் தகுதி:
அதனால் குறைந்தபட்சம் 5 ஓவர் கொண்ட போட்டியை நடத்துவதற்காக இரவு 10.30 மணி வரை காத்திருப்பதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் 10 மணி கடந்தும் தொடர்ந்து மழை பெய்ததால் வேறு வழியின்றி போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஹைதராபாத் மைதானத்தில் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2008 முதல் ஹைதராபாத் நகரில் இதுவரை 76 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் ஒரு பந்து கூட வீசப்படாமல் மொத்த போட்டியும் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அதன் காரணமாக 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. அதையும் சேர்த்து மொத்தம் 13 போட்டிகளில் 15 புள்ளிகளை பெற்ற ஹைதராபாத் அணி கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இருப்பினும் 2வது இடத்தை பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற ஹைதெராபாத் அணி தங்களுடைய கடைசி போட்டியில் வெல்வதுடன் ராஜஸ்தான் அதனுடைய கடைசி போட்டியில் தோற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த குஜராத் 14 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்று வீட்டுக்கு கிளம்பியது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இப்போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈகோவை விட்ருவாரு.. லாரா மிருகம்.. சச்சின் – கோலி ஆகியோரில் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்த டேவிட் லாய்ட்

அந்த வகையில் அடுத்தடுத்த போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ஆறுதல் வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் குஜராத் வெளியேறியது. இதன் காரணமாக நாளை நடைபெற உள்ள சென்னை மற்றும் பெங்களூரு மோதும் போட்டியில் வெல்லும் அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒருவேளை அப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் சென்னை உள்ளே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement