உலககோப்பை நாயகனான டிராவிஸ் ஹெட்டை தட்டிதூக்கிய அணி எது? – எவ்வளவு தொகை தெரியுமா?

Travis-Head
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது துபாயில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த அணி? எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இவ்வேளையில் தற்போது இந்த ஏலத்தில் அனைத்து அணிகளுமே போட்டி போட்டு வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி 80 லட்சம் ஏலத்தில் சென்றுள்ளார்.

- Advertisement -

அகமதாபாத் நகரில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 240 ரன்களை குவிக்க பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கினை எதிர்த்து களமிறங்கிய போது ஆஸ்திரேலியா அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளை சந்தித்து 137 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

அவரது அந்த அசத்தலான ஆட்டம் காரணமாக அவருக்கு உலககோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இப்படி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த அவரை சன்ரைசஸ் ஹைதராபாத் அணியானது அசத்தலான வகையில் 6 கோடி 80 லட்சம் என்கிற குறைந்த விலையில் ஏலத்தில் எடுத்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் வீரர்கள் ஏல வரலாற்றில் முதல் முறை.. 2024 சீசனில் பிசிசிஐ செய்த பிரம்மாண்டம்.. ரசிகர்கள் வரவேற்பு

ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தவித்து வரும் வேளையில் இடதுகை அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அந்த அணிக்கு ஒரு நல்ல தேர்வு என்றே கூறலாம்.

Advertisement