ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்சை சன் ரைசர்ஸ் அணி கோட்டை விட அவர்கள் செய்த இந்த 3 தவறே காரணம் – லிஸ்ட் இதோ

Shankar
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஓரளவிற்கு ஆடி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் குயின்டன் டி காக் 40 ரன்களும், ரோகித் சர்மா 32 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த பொல்லார்ட் 22 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க மும்பை அணிகள் ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. மிக எளிதான இலக்கை துரத்திய ஆடிய ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.

pollard

- Advertisement -

ஜானி பேர்ஸ்டோ 43 (22), டேவிட் வார்னர் 36 (34) ரன்கள் எடுத்து வெளியேறினார். வெற்றியை நோக்கி மிகச்சிறப்பாக சென்று கொண்டிருந்த ஹைதராபாத் அணி திடீரென அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியின் இந்த தோல்வி மிகப் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது தற்போது இந்த தோல்விக்கான 3 சரியான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

கடைசி இரண்டு பந்துகள் :

ஹைதராபாத் அணி பந்து வீசி கொண்டு இருந்த போது 19-வது ஓவரை மும்பை அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இதில் முதல் 4 பந்துகளில் பெரிதாக பவுண்டரிகள் அடிக்க படவில்லை கடைசி 2 பந்துகளில் கீரோன் பொல்லார்ட் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இந்த ஓவரில் மட்டும் ஐதராபாத் அணி 17 ரன்களை விட்டுக் கொடுத்து விட்டது. இதன் காரணமாகத்தான் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 150 என்னும் ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்ட முடிந்திருந்தது. இன்னும் ரன்கள் குறைவாக விட்டுக் கொடுத்து இருந்தால் ஹைதராபாத் அணியின் வெற்றி இலக்கை எளிதாக இருந்திருக்கும்.

- Advertisement -

Bairstow

வார்னர் மற்றும் பேர்ஸ்டோவின் விக்கெட்டுகள் :

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ, க்ருனால் பாண்டியா பந்து வீசும்போது ஸ்டெம்பை மிதித்து தனது விக்கெட்டை இழந்தார். இதுதான் அந்த அணி தொடர்ந்து பல விக்கெட்டுகளை இலக்க காரணமாக இருந்தது. இவர் களத்தில் இருந்த வரை அதிரடியாக ரன்கள் உயர்ந்து கொண்டே இருந்தது. அதனை தொடர்ந்து டேவிட் வார்னர் ரன் அவுட்டாகி தேவையில்லாமல் வெளியேறினார். அவ்வளவுதான் அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக் கட்டுகளை போல் சரிந்தது ஐதராபாத் அணியின் பேட்டிங் யூனிட். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பும் எளிதாகிவிட்டது.

bhuvi

ஐதராபாத் அணியின் நடுவரிசை ஓட்டை :

ஐதராபாத் அணியில் துவக்க வீரர்கள் மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடுகின்றனர். அதனை தொடர்ந்து வரும் நடுவரிசை வீரர்களால் அந்த அளவிற்கு ரன்கள் குவிக்க .கேன் வில்லியம்சன் இருந்திருந்தால் இந்த இடத்தை மிகச்சரியாக நிரப்பி இருப்பார். இந்த பலவீனத்தை சரி செய்யவில்லை என்றால் வரும் போட்டிகளிலும் இதுபோன்ற தோல்விகளை எதிர்கொள்ள ஹைதராபாத் அணி தயாராக வேண்டியதுதான்.

Advertisement