எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குணம் மாறாத ஸ்ரீசாந்த். இப்படியா பண்ணுவீங்க – ரசிகர்கள் வருத்தம்

Sreesanth
- Advertisement -

2021ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் வருகின்ற ஜனவரி 10 முதல் 31 வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறுவது, இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் கேரளா மாநில அணிக்காக ஸ்ரீசாந்த்தும் கலந்துகொண்டு விளையாடவுள்ளார்.

Sreesanth 1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் சிறந்த பவுலர்களில் ஒருவரான ஸ்ரீசாந்த் ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. தற்போது ஸ்ரீசாந்தின் தடைகள் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் முதல் தரப் போட்டிகளில் அவர் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். தனது தடை காலத்திற்குப் பிறகு முதன்முதலாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இந்த ஆண்டு கேரள அணியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி சையது முஷ்டாக் அலி டி20 தொடர் தொடங்க உள்ளதால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கேரளா அணி சார்பாக ஸ்ரீசாந்த் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலைப்பயிற்சியில் ஸ்ரீசாந்த் தனது பவுலிங் மூலம் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஸ்ரீசாந்த் பவுலிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சக வீரர்ககளை கோபமாகவே எதிர்கொள்கிறார்.

sreesanth 1

பயிற்சியின் போது இளம் வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி அவர்களை கடுமையாக திட்டுகிறார். முதல் முறையாக சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் இளம் வீரர்களை ஸ்ரீசாந்த் சீனியர் வீரர் என்ற முறையில் ஊக்குவிக்காமல் அனைவரையும் கடுமையாக திட்டி வழிநடத்தி வருகிறார். ஒரு காலத்தில் இந்திய அணியில் இவரது கோபம் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தாலும் தற்போது இவரது கோபம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Srisanth 1

இந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு கிடைக்கலாம். எனவே ஸ்ரீசாந்த் தனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement