ஆண்ட்ரே நெல்லுடன் களத்தில் ஏற்பட்ட மோதலுக்கு இதுவே காரணம் – மனம்திறந்த ஸ்ரீசாந்த்

Sreesanth
- Advertisement -

இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஸ்ரீசாந்த். 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நடைபெற்ற சூதாட்ட பிரச்சனை காரணமாக கிரிக்கெட் போட்டியிலிருந்து வாழ்நாள் தடை செய்யப்பட்ட அவர் மீண்டும் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என்ற தீர்ப்பு நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் மீண்டும் களமிறங்கும் உத்வேகத்துடன் உழைத்து வருகிறார்.

Sreesanth 1

- Advertisement -

இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டியில் விளையாடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்த ஸ்ரீசாந்த் 2007 t20 உலகக்கோப்பை அணியில், 2011 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியிலும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் நடைபெற்ற சூதாட்டப் புகாரில் சிக்கிய வாழ்நாள் தடை அவர் மீண்டும் தற்போது விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ள ரஞ்சி டிராபி தொடரில் கேரளா அணிக்காக மீண்டும் ஆடும் உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த் இந்திய அணிக்கும், ஐபிஎல் தொடரிலும் மீண்டும் ஆட எதிர்பார்ப்புடன் உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஸ்ரீசாந்த் 2007 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க தொடரில் ஆண்ட்ரே நெல் உடனான மோதல் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

- Advertisement -

அந்தத் தொடரின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வீரரான ஸ்ரீசாந்தை நோக்கி பந்துவீசிவிட்டு ரொம்ப மோசமாக பேசிவிட்டு சென்றார். இதனால் கோபமடைந்த ஸ்ரீசாந்த் அடுத்த பந்தை சிக்சருக்கு அடித்துவிட்டு பேட்டை தலையை சுற்றி ஒரு டான்ஸ் ஆடினார். அந்த சம்பவம் அப்போது அதிக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த் கூறுகையில் :

Sreesanth 1

அவருடைய பந்தை நான் சிக்ஸர் அடித்ததும் நிறைய பேர் சிரித்து இருப்பார்கள் என்பது எனக்கே தெரியும் ஆனால் என்னையும் எனது நாட்டையும் பற்றி அவர் தவறாக பேசினார் அது யாருக்கும் தெரியாது. எனவே அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் மேலும் அவரை அடக்க வேண்டும் என்று நினைத்து தான் அந்த சிக்ஸரை அடித்தேன். அதேபோல மற்றொரு வீரரும் என்னை மட்டம் தட்டி பேசினார். அதன் பின்னர் அவரை நாம் நான்கு முறை டக் அவுட் செய்துள்ளேன் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement