ஹர்பஜன் கிட்ட அடிவாங்கிய பிறகு நான் இப்படி ஆகிட்டேன்..! – கட்டுமஸ்தாக மாறிய ஸ்ரீசாந்த்..! ஹர்பஜனை பழிதீர்ப்பாரா..! வைரலாகும் வீடியோ

bhaji

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளராக இருந்து வந்தவர் ஸ்ரீசாந்த், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தபட்டு வருகிறது. கிரிக்கெட் இவரை கைவிட்டதால் தற்போது சினிமா நடிகராக அவதாரமெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாக ஜிம்மில் கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்த ஸ்ரீகாந்த் தனது உடலை ஏற்றி மிகவும் கட்டுமஸ்தாக தோற்றமளிக்கிறார். சமீபத்தில் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜனை கிண்டல் செய்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ஹர்பஜன் சிங் மும்பை அணியிலும் ஸ்ரீசாந்த் பஞ்சாப் அணியிலும் விளையாடி வந்தனர். இந்த தொடரில் மொஹாலியில் நடைபெற்ற லீக் போட்டியின் போது ஹர்பஜன் சிங், ஸ்ரீஷாந்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டானா.ஆனால், ரசிகர்கள் இதனை மறக்கவில்லை. சமீபத்தில் ஸ்ரீசாந்த் பிட்டான தனது உடலை புகை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் அதனை கண்ட ரசிகர்கள், அந்த புகைப்படத்துடன் ஹர்பஜனை தொடர்புபடுத்தி கிண்டல் செய்து வருகின்றனர்.

A post shared by Sree Santh (@sreesanthnair36) on


தற்போது ட்விட்டரில் சில ரசிகர்கள் “ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை தற்போது பார்த்தல், கண்டிப்பாக ஸ்ரீசாந்துடன் மீண்டும் விளையாட யோசிக்க கூட மாட்டார்” என்றும் “ஒருவேளை ஹர்பஜன் , ஸ்ரீஷாந்திடம் மீண்டும் விளையாடினாள் யோசித்து பாருங்கள் ” என்று ஹர்பஜன் , ஸ்ரீகாந்தை அறைந்ததை நினைனைவூட்டி கிண்டல் செய்து வருகின்றனர்.