7 வருட கஷ்ட காலத்தில் இருந்து தற்போது ஸ்ரீசாந்த்க்கு அடித்த ஜாக்பாட் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Srisanth
- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது மேட்ச் பிக்சிங் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக அவருக்கு தடையும் விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வெறும் 28 வயதுதான். ஆயுட்கால தடை விதிக்கப்பட்ட இவர் எப்படியோ அந்த வழக்கினை முடித்து தற்போது தடையில் இருந்து மீண்டுள்ளார்.

சூதாட்ட புகாருக்கு பின்னர் கடந்த 7 வருடமாக தொடர்ச்சியாக நீதிமன்ற வாசல் படியை மிதித்து கொண்டிருந்தார் ஸ்ரீசாந்த். அனைத்திலும் விசாரணையிலும் கலந்துகொண்ட அவர் தனது பக்கத்தில் இருந்த உண்மையை கூற இறுதியில் இவர் மேட்சிங் செய்யவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குள் இவரது கிரிக்கெட் காலகட்டம் முடிந்துவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் இவரது தடையையும் விலக்கி இவருக்கு கிரிக்கெட் விளையாடும் அனுமதியும் கொடுத்தது. எப்படியாவது மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் ஸ்ரீசாந்த்.

Srisanth 1

இந்நிலையில் கேரள கிரிக்கெட் வாரியம் இந்த வருடத்திற்கான ரஞ்சி கோப்பை அணியை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்ரீசாந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ரஞ்சி கோப்பை விளையாடும் 30 வீரர்களின் பெயரில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் மீண்டும் கேரளா அணிக்காக விளையாட போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்காக 53 ஒருநாள் போட்டிகளிலும், 27 டி20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் மீண்டும் ரஞ்சி தொடரில் ஆட இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த் விரைவில் இந்திய அணியில் இடம் இடிப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement