7 ஆண்டு தடைக்குப்பின் களமிறங்கவுள்ள ஸ்ரீசாந்த். எந்த போட்டியில் தெரியுமா ? – விவரம் இதோ

Srisanth
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சாந்தகுமார் ஸ்ரீசாந்த் 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பல ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர் கடந்த வருடம் தான் மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று நிரூபித்தார் ஸ்ரீசாந்த் இதன் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

Sreesanth 1

- Advertisement -

தற்போது அவருக்கு 36 வயதாகிவிட்டது. மேலும் தான் மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று நிரூபித்த உடன் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதனை அடுத்து அவர் கேரள மாநில கிரிக்கெட் அணியில் இணைவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். மேலும் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சியும் செய்து வந்தார் .

இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பிரசிடென்ட் கோப்பை டி20 தொடர் நடக்க இருக்கிறது இதற்காக அவர் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையொட்டி அவர் கொச்சி மைதானத்தில் தீவிர பயிற்சி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது….

எனக்கு வாய்ப்பளித்த கேரள கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினருக்கு நன்றி. என்னுடைய 7 ஆண்டு காத்திருப்பிற்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்.

Srisanth 1

இந்தியாவிற்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார் ஸ்ரீசாந்த். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement