இந்திய அணியை வீழ்த்த இந்த ஒரு விஷயம் எங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் – டிம் சவுதி ஓபன்டாக்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய போட்டியாக கருதப்படும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் இந்த போட்டியை காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

INDvsNZ

இதற்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து சென்ற போது நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை தோற்றது. ஆனால் அதன்பின்னர் நடைபெற்ற இங்கிலாந்து ஆஸ்திரேலியா என அடுத்தடுத்து தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் நிச்சயம் இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

ஆனால் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னர் நியுசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டி முடிந்த உடனேயே இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சவுதி கூறுகையில் :

Southee-3

இங்கிலாந்து அணியுடன் நாங்கள் இரண்டு போட்டிகளில் விளையாடி விட்டு இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் அது எங்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். இங்கிலாந்து அணி சாதாரண அணி கிடையாது. அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடுவது மிக முக்கியமான இரண்டு போட்டிகள் அந்த இரண்டு போட்டிகளை ஒரு பயிற்சிக்காக விளையாடுகிறோம் என்று நினைக்காமல் வெற்றி பெற நிச்சயமாக போராடுவோம்.

- Advertisement -

Southee 2

அப்படி அந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் எங்களுக்கு சாதகமாக வெற்றிபெற்றால் எங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். அதுமட்டுமின்றி இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலையிலும் எங்களுக்கு சற்று பழக்கமாகிவிடும் இந்த இரண்டு விடயங்களும் எங்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் நாங்கள் நிச்சயம் இந்திய அணியை தோற்கடிக்க முடியும் என சவுதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement