இரண்டாக உடைந்த மும்பை குடும்பம்? வதந்திகளை உண்மையாக்கும் வீடியோ ஆதரங்கள்.. வெளியான தகவல்

MI Team Rift
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக தோனி தலைமையிலான சென்னைக்கே ரோஹித் சர்மா தலைமையில் பலமுறை டஃப் கொடுத்த மும்பை 5 கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்தது. மேலும் ரோகித் சர்மா தலைமையில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டதால் மும்பை அணிய ஒரே குடும்பம் என அந்த அணி ரசிகர்கள் அழைப்பது வழக்கமாகும்.

ஆனால் இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அப்போதிலிருந்தே மும்பையின் சரிவு ஏற்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டதால் கொந்தளித்த மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தினார்கள்.

- Advertisement -

மும்பையின் விரிசலா:
மேலும் அஹமதாபாத் மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலேயே தங்களுடைய கேப்டன் என்று பாராமல் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்ட மும்பை ரசிகர்கள் குஜராத் வெற்றியை கொண்டாடினார்கள். அந்தப் போட்டியில் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தியது ரசிகர்களின் கோபத் தீயில் எண்ணையை ஊற்றியது.

இந்நிலையில் ஒரே குடும்பம் என்று அழைக்கப்பட்ட மும்பை அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா, பும்ரா, திலக் வர்மா ஆகியோர் ஒரு பிரிவாகவும் ஹர்திக் பாண்டியா, இசான் கிசான் போன்றவர்கள் ஒரு பிரிவாகவும் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. ஆனால் மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே ரோஹித், பும்ரா ஆகியோர் ஃபீல்ட் செட்டிங் செய்வதற்காக பாண்டியாவிடம் சென்று பேசுகின்றனர். ஆனால் அவர்களிடம் முகம் கொடுத்து பேசாமல் பாண்டியா புறக்கணித்து சென்ற வீடியோ வைரலானது. அதைத்தொடர்ந்து 277 ரன்கள் வாரி வழங்கிய ஹைதராபாத்துக்கு எதிரான இரண்டாவது போட்டி முடிந்ததும் ரோகித்தை பின்புறத்தில் சென்று பாண்டியா கட்டிப்பிடித்தார்.

ஆனால் அதை உதறி விட்ட ரோகித் சர்மா கோபமாக பாண்டியாவிடம் பேசினார். அதே போட்டியின் முடிவில் பயிற்சியாளர் லஷித் மலிங்கா கை கொடுக்க வந்த போது அதை ஏற்காமல் பாண்டியா சென்றார். அதை விட 2வது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பேட்டிங் செய்ய தயாரான பாண்டியா தனது இருக்கையை கொடுக்குமாறு பொல்லார்ட் அருகே அமர்ந்திருந்த மலிங்காவிடம் கேட்கிறார்.

இதையும் படிங்க: ஐபிஎல் இன்னும் 3 வருஷத்துல நடக்காதுன்னு அந்த நியூஸிலாந்து வீரர் சொன்னாரு.. அஸ்வின் பகிர்ந்த பின்னணி

அப்போது அருகிலிருந்த பொல்லார்ட் எழுந்திருப்பதற்கு முன்பாக மலிங்கா கோபத்துடன் எழுந்து சென்றார். பின்னர் மலிங்கா அமர்ந்திருந்த இருக்கையில் பாண்டியா அமர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஒரு சாதாரண ரசிகனால் மும்பை அணியில் ஒற்றுமையில்லை என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தவறான புரிதல்களை துறந்து விட்டு மீண்டும் மும்பை ஒரே அணியாக சேர்ந்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement