- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 ஆவது போட்டியிலாவது அவரை விளையாட வைங்க.. கவுதம் கம்பீருக்கு – சவுரவ் கங்குலி வேண்டுகோள்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

5 ஆவது போட்டியிலாவது அவரை சேருங்க : சவுரவ் கங்குலி கருத்து

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். இதன் காரணமாக இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கடைசி போட்டிக்கான அணியில் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி வேண்டுகோள் வைத்துள்ளார். இரு தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது : இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். அப்படி அவரை சேர்த்து சரியான பந்துவீச்சு தாக்குதலை இங்கிலாந்து அணிக்கு எதிராக நிகழ்த்த வேண்டும்.

- Advertisement -

இதனை கவுதம் கம்பீர் செய்வார் என்று நினைக்கிறேன். அதேபோன்று பேட்டிங்கிலும் தொடர்ந்து நாம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம். இளம் வீரர்களை கொண்ட தற்போதைய இந்திய அணி மீண்டும் கட்டமைக்கப்படுவதால் அவர்களுக்கு நாம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த விதத்தை பார்க்கும் போது லார்ட்ஸ் போட்டியில் அடைந்த தோல்வியை நினைத்து நமது அணி வருத்தப்படும்.

இதையும் படிங்க : இது முதல்முறை அல்ல.. என் பையனுக்கு தொடர்ந்து இந்த அநியாயம் நடக்குது – வாஷிங்டன் சுந்தரின் தந்தை குற்றச்சாட்டு

ஏனெனில் லார்ட்ஸ் போட்டியில் 190 ரன்கள் என்கிற இல்லை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தனர். ஆனால் தற்போது மிகப்பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆட்டம் நமது வீரர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கையை வழங்கியிருக்கும். இப்படி இளம் வீரர்கள் வெளிநாட்டு தொடரில் இவ்வளவு சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியான ஒன்றுதான். இதே செயல்பாட்டை நாம் தொடர்ந்து வெளிப்படுத்தினால் நிச்சயம் அடுத்த போட்டியிலும் வெற்றிபெற முடியும் என்று தான் நம்புவதாக கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -