9வது இடத்தில் அக்சர் பட்டேலை வெச்சுகிட்டு நாம இப்டி ஆடலாமா? உ.கோ வெல்ல இந்திய அணிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்

Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரில் 2019க்குப்பின் 26 தொடர்களுக்கு பின் 4 வருடங்கள் கழித்த முதல் முறையாக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த இந்தியா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தன்வசம் வைத்திருந்த நம்பர் ஒன் இடத்தையும் ஆஸ்திரேலியாவிடம் பறி கொடுத்தது இந்திய ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

IND-vs-AUS

- Advertisement -

மேலும் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல், 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் போன்ற முக்கிய போட்டிகளில் முகமது அமீர், ட்ரெண்ட் போல்ட் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறிய இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 வருடங்கள் கழித்து கொஞ்சமும் முன்னேறாமல் மீண்டும் இந்த தொடரில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் 2வது போட்டியில் பெட்டி பாம்பாக அடங்கினர். அதே போல் 2021 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தின் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தோல்வியை சந்தித்தது போலவே இத்தொடரின் 2வது போட்டியில் இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் முரட்டுத்தனமாக அடி வாங்கினர்.

கங்குலி அட்வைஸ்:
அப்படி சமீப கால தோல்விகளிலிருந்து எந்த முன்னேற்றத்தையும் காண வேண்டும் இந்தியா நிச்சயமாக சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை இம்முறையும் வெல்லப் போவதில்லை என இந்திய ரசிகர்கள் இப்போதே கவலையை வெளிப்படுத்துகிறார்கள். முன்னதாக நல்ல திறமை இருந்தும் எங்கே தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்படுவதே 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்தியா திணறுவதற்கு காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தொடர்ந்து விமர்சித்து வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் இந்திய பேட்டிங் வரிசையில் குறிப்பாக 9வது இடத்தில் அக்சர் பட்டேல் போன்றவர் விளையாடும் போது டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமான அணுகு முறையில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்க வேண்டாமா என்று முன்னாள் இந்திய அதிரடி தொடக்க வீரர் மற்றும் கேப்டன் சௌரவ் கங்குலி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே வருங்காலங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்திற்கு அஞ்சாமல் அதிரடியாக விளையாடினால் தான் உலகக் கோப்பை போன்ற தொடர்களை வெல்ல முடியும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். அதை செய்வதற்கு அவர்களிடம் தேவையான அணியும் இருக்கிறது. குறிப்பாக அக்சர் பட்டேல் போன்ற ஒருவர் 9வது இடத்தில் பேட்டிங் செய்யும் அணியில் டாப் ஆர்டரில் இருப்பவர்கள் அதிரடி சரவெடியாக விளையாட வேண்டும். உங்களிடம் 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா 7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் இருப்பதால் பேட்டிங் வரிசை தேவையான அளவு ஆழமாக இருக்கிறது”

Ganguly

“எனவே இவை அனைத்தையும் அழுத்தத்துக்கு தகுந்தார் போல் உங்களது போட்டியை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் அட்ஜஸ்ட் செய்து பேட்டிங் செய்வதாகும். இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே அதிகப்படியான திறமை உள்ளது. குறிப்பாக இந்தியா எப்போதும் அடுத்த கட்டத்தை தொட வேண்டும் என்ற பசியுடன் செயல்படும் நாடாகும். எனவே இவை அனைத்தும் நீங்கள் ஒரு பெரிய தொடருக்கு எவ்வாறு தயாராகிறீர்கள் என்பதை பொறுத்ததாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:போன வருஷம் நடந்த தப்பு இந்த வருஷம் நடக்காது. அதுக்கு நான் கேரண்டி – சி.எஸ்.கே ரசிகர்களுக்கு உறுதியளித்த ராயுடு

ஆனால் இப்போதெல்லாம் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சிலும் ஐபிஎல் தொடரிலும் தங்களை ஆகாய சூரர்கள் என்பது போல் காட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்காக பெரும்பாலான போட்டிகளில் தடவலாக செயல்படுவது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியாக இருந்து வருகிறது.

Advertisement