போன வருஷம் நடந்த தப்பு இந்த வருஷம் நடக்காது. அதுக்கு நான் கேரண்டி – சி.எஸ்.கே ரசிகர்களுக்கு உறுதியளித்த ராயுடு

rayudu 2
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது மார்ச் 31-ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை முதல் துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சீசனுக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவிருக்கிறது. இந்த முதல் போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு தயாராகும் விதமாக ஏற்கனவே சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இன்னும் சில தினங்களில் அகமதாபாத் சென்று முதல் போட்டியில் பங்கேற இருக்கின்றனர். கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்பதாவது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் சென்னை அணியானது வெளியேறியது.

இம்முறை சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி கடைசி சீசனை விளையாட இருப்பதால் கோப்பையை கைப்பற்றி அவருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டும் என்று சி.எஸ்.கே அணி முனைப்பை காட்ட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாட இருக்கும் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு இந்த முதல் போட்டிக்கு முன்னதாக ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றினை அளித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த வருடம் பயோபபுள் விதிமுறை இல்லாமல் நாங்கள் விளையாட இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. சொந்த மைதானத்திலும் போட்டிகள் நடைபெற இருப்பதால் நிச்சயம் சென்னையில் எங்களுக்கு பெருமளவு ஆதரவு இருக்கும். சென்னை ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மத்தியில் மீண்டும் விளையாடுவதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

கடந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் நான்கு ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் வெற்றி பெற்றோம். எங்களுக்கு அது ஒரு மோசமான சீசனாக அமைந்தது இருந்தாலும் தற்போது புது சீசனில் உற்சாகமாக புத்துணர்வோடு விளையாட வந்திருக்கிறோம். இம்முறை நிச்சயம் நாங்கள் சரியான முறையில் திட்டமிட்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதனை ஒரு நல்ல சீசனாக மாற்றுவோம் என ராயுடு ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : வாழ்க்கையில் முதல் முறையாக அன்பால் தோற்கடிக்கப்பட்டு கண் கலங்கிட்டேன் – ரசிகர்களுக்கு ஏபிடி நன்றி

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய இரண்டு போட்டிகளுமே குஜராத் அணி தான் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்காரணமாக இம்முறை வெற்றியுடன் தொடரை துவங்க சி.எஸ்.கே அணி காத்திருக்கிறது.

Advertisement