இவர் டீம்ல இருந்தாலும் இன்னும் 100% பிட்னசுடன் இல்லை. அதனால் தான் டெஸ்ட்ல மட்டும் சேன்ஸ் கொடுத்தோம் – கங்குலி அதிரடி

Ganguly
- Advertisement -

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டது. அங்கு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது இதற்கான அணி அறிவிக்கப்பட்டது. மூன்று வகையான போட்டிகளுக்கும் தனித்தனியாக அணி அறிவிக்கப்பட்டது.

INDvsAUS

- Advertisement -

ஆரம்பத்தில் இதில் எந்த ஒரு அணியிலும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை அதன் பின்னர் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தார். ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் அதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி. அவர் கூறுகையில்…

ரோகித் சர்மாவின் உடல் 70 சதவீதம் தான் தகுதியாக இருக்கிறது. அதனால்தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. அதேநேரத்தில் விருத்திமான் சஹா காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு தகுதியானவர் என்று தெரிவித்து இருக்கிறார் சௌரவ் கங்குலி.

rohith 1

ஐபிஎல் தொடரின்போது 5 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடவில்லை ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதில் இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிபெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் போட்டியின் போதும் கூட எனது உடல் தகுதி சரியாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார் ரோஹித் சர்மா.

Rohith

மேலும் விராட் கோலி கடைசி மூன்று டெஸ்ட் போட்டியில் ஆட போவதில்லை என்பதால் அந்த போட்டிகளில் நிச்சயம் ரோஹித் சர்மா அணிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement