இம்பேக்ட் பிளேயர் நல்லாருக்கு.. ஆனா இந்த 2 மாற்றத்தை செஞ்சுட்டு யூஸ் பண்ணலாம்.. தாதா கங்குலி கருத்து

Sourav Ganguly 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்து வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. முன்னதாக இம்முறை வழக்கத்திற்கு மாறாக பேட்ஸ்மேன்கள் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவித்தனர் என்றே சொல்லலாம்.

குறிப்பாக ஹைதெராபாத் அணி மட்டும் 287 ரன்கள் விளாசி 5 ஓவரில் 100 ரன்கள் குவித்து எதிரணிகளை தெறிக்க விட்டது. இந்த அதிரடிக்கு கடந்த வருடம் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் அதன் காரணமாக ஒவ்வொரு அணியும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கி எதிரணிகளை பந்தாடின.

- Advertisement -

கங்குலி ஆதரவு:
அதனால் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுக்கும் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு தாம் ரசிகன் அல்ல என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதே போல நிறைய முன்னாள் இந்நாள் வீரர்களும் இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்நிலையில் காலத்திற்கு தகுந்தார் போல் இம்பேக்ட் வீரர் விதிமுறை புதுமையை ஏற்படுத்துவதாக சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் டாஸ் வீசும் போதே இம்பேக்ட் வீரர்கள் யார் என்பதை அறிவிப்பது வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் என்று கங்குலி கூறியுள்ளார். அத்துடன் மைதானத்தில் பவுண்டரி அளவை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இம்பேக்ட் வீரர் விதிமுறையை நான் விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய ஒரே மாற்றம் என்னவெனில் மைதானங்கள் இன்னும் கொஞ்சம் பெரிதாக்க வேண்டும்”

- Advertisement -

“பவுண்டரி எல்லைகள் கொஞ்சம் விரிவாக்கப்பட வேண்டும். ஐபிஎல் சிறப்பான தொடர். அதில் டாஸ் வீசுவதற்கு முன்பாக இம்பேக்ட் வீரர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். அதிலும் ஒரு திறமை இருக்கிறது. எனவே இம்பேக்ட் வீரர் யார் என்பதை முன்னதாகவே வெளியிட வேண்டும். ஏனெனில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு நிறைய திறமையும் திட்டமும் தேவைப்படும். ஆனால் நான் அந்த விதிமுறைக்கு ஆதரவாகவே இருக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: என் வழியும் தோனி வழி தான்.. துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசும் ரகசியம்.. பற்றியும் பும்ரா பேட்டி

அதே போல திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர விதிமுறை குறை சொல்லக்கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி சாஸ்திரி போன்றவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். முன்னதாக அனைத்து அணிகளிடமும் ஆலோசனைகளை பெற்று அடுத்த வருடம் இம்பேக்ட் வீரர் விதிமுறையில் மாற்றம் செய்யப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement