கடினமான அந்த சோதனையில் சாதித்த சுப்மன் கில்.. வெற்றிகரமான கேப்டனாக தொடர்வார்.. கங்குலி நம்பிக்கை

Sourav Ganguly 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரிலும் இந்தியா தோல்வியை சந்தித்ததால் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றார்கள். அதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி இங்கிலாந்தில் படுதோல்வியை சந்திக்கும் என்று பலரும் கணித்தனர்.

- Advertisement -

சோதனையில் சாதித்த கில்:

ஆனால் அவருடைய தலைமையில் இங்கிலாந்தில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்தியா 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. குறிப்பாக சவாலான இங்கிலாந்தில் பேட்டிங்கில் 954 ரன்கள் அடித்த கில் பல சாதனைகள் படைத்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அத்துடன் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது தம்மை விமர்சித்தவர்களுக்கும் அவர் தக்க பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் சுப்மன் கில் போன்ற கேப்டன்ஷிப் இல்லாதவர் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை தலைமைத் தாங்குவது மிகவும் கடினமான வேலை என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சோதனையில் சுப்மன் கில் வெற்றிகரமாக செயல்பட்டு சாதனை படைத்ததாக அவர் பாராட்டியுள்ளார். எனவே வருங்காலங்களிலும் அவர் டெஸ்ட் கேப்டனாக அசத்துவார் என்றும் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கங்குலி நம்பிக்கை:

இது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் நன்றாக விளையாடுகிறார். அவர் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் நல்ல கேப்டன். இங்கிலாந்தில் அவர் இந்தியாவை சிறந்த முறையில் கேப்டனாக தலைமைத் தாங்கினார். ஒரு இளம் பையனாக இங்கிலாந்துக்குச் சென்று அங்கே இந்தியாவின் கேப்டனாக செயல்படுவது எளிதானது கிடையாது. அதை செய்த அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக கேப்டனாக நன்றாக செயல்படுவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை அப்படி பார்த்து நாங்களும் கலங்கிட்டோம்.. உ.கோ வென்ற இந்திய வீராங்கனை பேட்டி

அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருடைய தலைமையில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வென்றது. எனவே 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் நோக்கத்துடன் விளையாடி வருகின்றது. இம்முறை இந்திய அணிக்கு நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் லீக் தொடர் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement