- Advertisement -
இந்திய கிரிக்கெட்

130 ஸ்ட்ரைக் ரேட் முக்கியம்.. இந்த பொண்ணு சீக்கிரமே இந்திய கேப்டனாகும் நாள் வரும்.. வாழ்த்திய கங்குலி

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கிய நேரத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு சென்றது. அங்கே 9 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தியது.

அதனால் இந்திய மகளிரணிக்கு ஐசிசி கொடுத்த 40 கோடி பரிசுத்தொகையுடன் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொடுத்தது. அது மட்டுமின்றி அனைத்து வீராங்கனைகளுக்கும் அந்தந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் பெங்காலை சேர்ந்த விக்கெட் கீப்பர் வீராங்கனை ரிச்சா கோஸ் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ரிச்சா கேப்டனாவார்:

குறிப்பாக செமி ஃபைனல் மற்றும் ஃபைனலில் அவர் முக்கிய ரன்களை அதிரடியாக அடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதிலும் குறிப்பாக இறுதிப்போட்டியில் 34 ரன்களை 130 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் மொத்தமாக 12 சிக்ஸர்கள் அடித்தார். அதனால் ஒரு மகளிர் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் ரிச்சா சமன் செய்தார்.

அவருக்கு நேற்று பெங்கால் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 34 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார். அத்துடன் காவல்துறையில் கௌரவ டிஎஸ்பி பொறுப்பு தங்க பேட், பந்து, சங்கிலி ஆகியவையும் ரிச்சாவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாம்பவான் சௌரவ் கங்குலி வருங்காலத்தில் ரிச்சா கோஸ் இந்திய மகளிரணியின் கேப்டனாக வருவார் என்று வாழ்த்தினார்.

- Advertisement -

வாழ்த்திய கங்குலி:

இது பற்றி அவர் பேசியது. “உங்களுடைய கேரியர் இப்போது தான் துவங்கியுள்ளது. மகளிர் கிரிக்கெட் அடுத்த 4 – 6 வருடங்களில் அதிகமாக வளரும் என்பதால் நிறைய வாய்ப்புகள் உருவாகும். அதை நீங்களும் அதிகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். வருங்காலத்தில் இங்கே இருக்கும் ஜுலன் கோஸ்வாமி (முன்னாள் கேப்டன்) போல நாங்கள் உங்களை இந்திய கேப்டன் ரிச்சா என்று அழைப்போம் என நம்புகிறேன்”

இதையும் படிங்க: 5 ஆவது போட்டி நின்ன கையோடு விமானத்தை பிடித்து கொல்கத்தாவுக்கு பறந்த 4 வீரர்கள் – என்ன அர்ப்பணிப்பு

“22 வயது மட்டுமே நிரம்பியுள்ள உங்கள் பக்கம் நேரம் இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள். குறைந்த பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதால் லோயர் ஆர்டரில் விளையாடுவது கடினம். மக்கள் செமி ஃபைனலில் ஜெமிமாவின் 127* அல்லது ஹர்மன்ப்ரீத்தின் 89 ரன்களை நினைவு கொள்வார்கள். ஆனால் ரிச்சாவின் 130 ஸ்ட்ரைக் ரேட் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவர் மந்தனா, ஹர்மன்ப்ரீத் போன்ற சக வீராங்கனைகளுக்கு சமமாக வெற்றியில் பங்காற்றினார்” என்று கூறினார்

- Advertisement -