
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கும் இந்திய அணியானது சொந்த மண்ணில் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருப்பதனால் நிச்சயம் இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
அதேபோன்று இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியும் சூரியகுமார் யாதவின் தலைமையில் பலமான அணியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோப்பை நமக்கே என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீரர்கள் எவ்வாறு செயல்படப்போகிறார்கள்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்வரும் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் கீ பவுலர் யார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இம்முறை டி20 உலக கோப்பை தொடரானது சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு அது ஒரு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே என்னை பொறுத்தவரை ஐசிசி தொடர்களில் என்னுடைய பேவரைட் அணி எது? என்று கேட்டால் நான் இந்திய அணியை தான் கூறுவேன். அந்த வகையில் இம்முறையும் இந்திய அணி தான் மிகச் சிறப்பான அணியாகவும் இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க : அவங்க 2 பேரும் இதுக்கு தகுதியானவங்க.. ரோஹித் மற்றும் கோலி குறித்து பேசிய ஜாக் காலிஸ் – விவரம் இதோ
நம்முடைய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் இத்தனை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் என்னை பொறுத்தவரை இந்திய அணியின் கீ பவுலராக வருண் சக்கரவர்த்தி தான் திகழ்வார். அவர் பிட்டாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் மீண்டும் ஒருமுறை இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.