- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த பலவீனத்தில் முன்னேறிய ஸ்ரேயாஸ் ஐயரை.. ஏன் இங்கிலாந்து தொடரில் விட்டீங்க? கங்குலி அதிருப்தி

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது பல ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் காயத்தால் வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பையில் விளையாடாத காரணத்தால் பிசிசிஐ மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி மும்பை சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவர் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தாவின் கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

முன்னேறிய ஸ்ரேயாஸ்:

மேலும் கடந்த காலங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் தடுமாற்றமாக விளையாடி விக்கெட்டை இழந்ததால் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் அதற்காக பயிற்சிகளை எடுத்து அந்த பலவீனத்தை சரிசெய்த அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அப்படியே 2025 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் ஷார்ட் பிட்ச் பலவீனத்தை சரி செய்து நல்ல ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுக்கவில்லை? என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “கடந்த ஒரு வருடமாக தன்னுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் அவர் அணியில் இருக்க வேண்டும்”

- Advertisement -

கங்குலி அதிருப்தி:

“கடந்த ஒரு வருடம் அவருக்கு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இது போன்ற வீரரை நீங்கள் விட்டுவிட்டு செல்ல முடியாது தற்போது அழுத்தத்தின் கீழ் பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாடும் அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக எதிர்கொள்கிறார். டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானது என்றாலும் இந்தத் தொடரில் நான் அவரை தேர்ந்தெடுத்து என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: மழை வந்தால் கோப்பை யாருக்கு? 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் – வெதர் ரிப்போர்ட், ரூல்ஸ் இதோ

இந்த சூழ்நிலையில் 18 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமீபத்தில் தெரிவித்தார். எனவே யாரேனும் காயமடையும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுப்போம் என்றும் அவர் மறைமுகமாக கூறியிருந்தார். அதனால் 5 போட்டிகள் முடிவதற்குள் ஸ்ரேயாஸ் இங்கிலாந்துக்கு சென்று விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -