இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. அந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாடுவது அவசியமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தைச் சந்தித்த அவர் தற்போது குணமடைந்து மீண்டும் விளையாடுகிறார். எனவே இங்கிலாந்தில் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் பும்ராவை இந்திய அணி நிர்வாகம் விக்கெட் டேக்கராக பயன்படுத்த வேண்டும் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா ஜெய்க்க:
மேலும் பும்ரா ஒரு போட்டியில் ஓய்வெடுத்து மற்ற 4 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் கங்குலி பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாட ஃபிட்டாக இருப்பார் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் அவருக்கு 2வது போட்டியில் வாய்ப்பு கொடுத்து மீண்டும் 4, 5வது போட்டிகளில் விளையாட வையுங்கள்”
“ஏனெனில் அவர் ஃபிட்டாக இருப்பது மிகவும் முக்கியம். பும்ராவை களத்தில் பவுலிங் செய்ய வைக்கக்கூடாது என்பதை சுப்மன் கில் புரிந்து கொள்ள வேண்டும். அவரைக் குறைந்த ஓவர்கள் பவுலிங் செய்ய வைத்து விக்கெட் டேக்கராக பயன்படுத்துங்கள். அப்போது தான் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியும். அவரைச் சுற்றி அர்ஷ்தீப் போன்ற மற்ற பவுலர்களை பயன்படுத்துங்கள்”
கங்குலி அட்வைஸ்:
“முகமது சிராஜ் அற்புதமான ஃபிட்னஸ், திறனைக் கொண்டுள்ளார். அதனால் பும்ராவை நீங்கள் விக்கெட் டேக்கராக பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். கௌதம் கம்பீர் உள்ளிட்ட சீனியர்கள் அவரை வழி நடத்துவார்கள் என்று நம்புகிறேன். நம்முடைய பேட்டிங் வரிசை அனுபவமற்றதாக இருந்தாலும் களத்தில் வித்தியாசமானதாக இருக்கும்”
இதையும் படிங்க: ஒரு வருஷமா அவர் சூப்பர் பார்ம்ல இருக்காரு.. அவரை இங்கிலாந்து கூட்டிட்டு போயிருக்கனும் – கங்குலி ஆதங்கம்
“எதிரணியில் ஜோ ரூட், ஹரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், பென் டக்கெட், கார்ஸ், ஜேமி ஸ்மித் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியா வெற்றி பெறுவதை எதுவும் தடுக்க முடியாது. இங்கே தொடரை வெல்பவர்கள் என்று யாரும் இல்லை. இந்தியா கடினமாக உழைத்து பும்ரா 4 போட்டிகளில் விளையாடினால் கூட இத்தொடரை வெல்ல முடியும்” என்று கூறினார்.



