இந்திய அணி ஜெயிக்குறது இவங்க 2 பேர் கையில் தான் இருக்கு – அட்வைஸ் செய்த கங்குலி

Ganguly-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்று இந்திய அணிக்கும் மற்றும் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்பமன் கில்லுக்கும் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார் பிசிசிஐயின் தலைவரான சவுரவ் கங்குலி. இதுகுறித்து அவர் பேசும்போது இந்திய அணிக்காக முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா என்ன செய்தார்களோ அதைதான் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

INDvsNZ

- Advertisement -

இந்திய அணிக்கு அவர் வழங்கியுள்ள அறிவுரையில் கூறியிருப்பதாவது, இங்கிலாந்தில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு பேட்டிங் தான் சற்று கவலை தரும் விடயமாக இருக்கிறது. கடந்த காலத்தில் இங்கிலாந்தில் நமது அணி எப்படி விளையாடியிருக்கிறது என்பதை இப்போதுள்ள வீரர்கள் மறந்துவிட வேண்டும். 300-350 ரன்களுக்கு மேல் அடித்தால் தான் நம்மால் இங்கிலாந்து ஆடுகளங்களில் வெற்றிக்காக போராட முடியும். இந்திய சூழ்நிலையும் இங்கிலாந்தின் சூழ்நிலையும் வேறுபட்டது என்பதால் பேட்டிங் விளையாட சற்று கடினமாகத்தான் இருக்கும்.

இருந்தாலும் அதிக ரன்களை அடிப்பது மட்டுமே இங்கிலாந்தில் நமக்கு வெற்றியைத் தேடி தரும் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் பதினோரு பேர் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ. இந்த பட்டியிலில் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ள சவுரவ் கங்குலி, புதிய பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதால், அதனை பழையதாக மாற்றும் மிகப் பெரிய பொறுப்பு இந்த இருவருக்கும் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

Gill

வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போது, ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக இந்திய அணிக்காக ஓப்பனிங் விளையாடிய முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகிய இருவரும், புதிய பந்துகளை சீக்கிரமாகவே பழையதாக மாற்றி, ஸ்விங் செய்ய இயலாத வண்ணம் செய்து விடுவார்கள். எனவே பின் வரிசை வீரர்களுக்கு அது மாதிரியான பந்துகளில் விளையாட எளிதாக இருக்கும்.

- Advertisement -

ரோஹித் சர்மவும், சுப்மன் கில்லும் இதேபோன்று செய்ய வேண்டும். ஒருவேளை அவர்கள் இருவரும் விரைவிலேயே தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்து விட்டால், அதற்கடுத்து வரும் பேட்ஸ்மேன்களும் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள நேரும். இதனை கவனத்தில் கொண்டு இருவரும் நன்றாக விளையாட வேண்டும். இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கும் பொருந்தும் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Gill 2

இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டியானது, இந்தியாவில் இன்று மாலை 3.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகும் என்று இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் டிஷ்னியிலும் இந்த போட்டியை நேரலையாக காணலாம்.

Advertisement