பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து வெளியேறுவது பற்றி நெகிழ்ச்சியுடன் கங்குலி பேசியது என்ன? – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டாக இன்று நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ காலம் காலமாக நிர்வகித்து வருகிறது. ஆரம்ப காலங்களில் இந்திய அணியை போலவே பொருளாதாரத்தில் ரொம்பவே திண்டாடிய பிசிசிஐ நாட்கள் செல்லச் செல்ல வளர்ந்து தற்போதைய ஐபிஎல் உதவியால் ஐசிசியை மிஞ்சி இன்று உலகின் நம்பர் ஒன் பணக்கார வாரியமாக உருவெடுத்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களை நிர்வகிக்கும் அரசு சாரா இந்த பிரம்மாண்ட அமைப்பை நிர்வகிக்கும் தலைவர் பதவி எப்போதுமே தனித்துவமானது.

Ganguly

- Advertisement -

அதில் 2019ஆம் ஆண்டு முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி போட்டியின்றி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார். 2000இல் சூதாட்ட புகாரில் சிக்கியபோது கேப்டனாக பொறுப்பேற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக ஒருசில வருடங்களிலேயே இந்தியாவை வெற்றிநடை போட வைத்த அவர் பிசிசிஐ தலைவராகவும் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் மகிழ்ந்தனர். அதற்கேற்றார்போல் பொறுப்பேற்றதுமே உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தி முதல் கையெழுத்திட்ட அவர் நீண்ட காலமாக யோசித்து வந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா விளையாடுவதற்கு ஏற்பாடு செய்தார்.

வெளியேறும் கங்குலி:
இருப்பினும் உலகக் கோப்பையை வெல்லாததால் சந்தித்த விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க 2021இல் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்பதை காரணமாக வைத்து அவரை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ ரோகித் சர்மாவை முழுநேர கேப்டனாக அறிவித்தது.

Ganguly

அதில் சௌரவ் கங்குலியின் தலையீடு இருந்தது நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அணி தேர்விலும் அவர் தலையிடுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் அதை மறுத்த அவர் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த நிலையில் பதவிக்காலம் முடிவடைவதால் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் பிசிசிஐ உயர்மட்டக் குழுவில் 1983 உலக கோப்பை வென்ற முன்னாள் வீரர் ரோஜர் பின்னி புதிய தலைவராக போட்டியின்றி பொறுப்பேற்க உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ள கங்குலி காலத்திற்கும் வீரராகவும் நிர்வாகியாகவும் செயல்பட முடியாது என்பதால் இப்பதவியிலிருந்து வெளியேறுவதாக மௌனம் கலைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் காலத்திற்கும் கிரிக்கெட் விளையாட முடியாததைப் போலவே காலத்திற்கும் நிர்வாகியாக இருக்க முடியாது. ஒவ்வொரு நிர்வாகியின் பதவி காலம் ஏதோ ஒருநாள் முடிவுற்றாக வேண்டும். மேலும் ஏதோ ஒரு மற்றொரு இடத்திற்கு நான் செல்ல விரும்புகிறேன். கடந்த 15 வருடங்களில் என்னுடைய கிரிக்கெட் கேரியர் சிறப்பாக அமைந்தது”

Ganguly

“நான் கிரிக்கெட் நிர்வாகியாக இருந்தேன். இங்கே நிறைய கிரிக்கெட் விளையாடப் படுவதாலும் நிறைய பணம் சம்பாதிக்கப்படுவதாலும் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அத்துடன் மகளிர் கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட் என பல்வேறு முடிவுகளை நீங்கள் தனிநபராக எடுக்க வேண்டியிருந்தது. என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது நம்பிக்கையாகும். இங்கு அனைவரும் சோதிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டு ஒருநாள் ஒதுக்கப்படுவார்கள். அப்படி நிலையற்ற வாழ்க்கைச் சக்கரத்தில் நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் மாறாமல் இருக்க வேண்டும்”

- Advertisement -

“என்னுடைய வேலையை நான் மகிழ்ச்சியாக செய்தேன். இந்த காலகட்டங்களில் கரோனா இடையூறுகளைக் கடந்து அண்டர்-19 உலகக் கோப்பை வென்றது, காமன்வெல்த் போட்டியில் மகளிரணி வெள்ளி வென்றது, ஆஸ்திரேலியாவில் ஆடவர் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்றது போன்றவை எனக்கு மகிழ்ச்சியாக அமைந்தன.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த பாபர் அசாம் – விவரம் இதோ

அந்த வகையில் அடுத்ததாக நடைபெறும் டி20 உலக கோப்பையில் நமது அணிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். இப்படி பிரியாத மனத்துடன் வெளியேறும் கங்குலி அடுத்ததாக அரசியலில் ஈடுபட உள்ளார் என்ற செய்திகள் அரசல் புரசலாக வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement