
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரை 2 – 2 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி போராடி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அந்த அணியின் கையில் 4 விக்கெட்டுகள் இருந்ததால் கண்டிப்பாக இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடைசி நாளில் 28 ரன்களை மட்டுமே கொடுத்த இந்தியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் வாயிலாக வரலாற்றில் இந்தியா ஒரு மேஜிக் வெற்றியை பெற்றது என்றே சொல்லலாம்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ரன்னுக்கும் குறைவாக வெற்றி பெற்று இந்தியா வரலாறு காணாத சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் கடைசி நாள் ஆட்டத்தை பார்த்து தமக்கு புல்லரிப்பு ஏற்பட்டதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை பாராட்டியுள்ளார். மேலும் இந்திய அணிக்கு பத்துக்கு பத்து மதிப்பெண் கொடுக்கலாம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட். முற்றிலும் புல்லரிப்பானது. தொடர் 2 – 2 என முடிந்துள்ளது. 10க்கு 10 செயல்பாடுகள். இந்தியாவிலிருந்து சூப்பர் மனிதன். என்ன ஒரு அற்புதமான வெற்றி” என்று பாராட்டியுள்ளார். அதே போல முகமது சிராஜ் இந்திய அணியை எப்போதும் கீழே விட்டதில்லை என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.
இளம் இந்திய அணியை அவரும் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “இந்திய அணியிடமிருந்து அற்புதமான வெற்றி. டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் சிறந்த ஃபார்மட். சுப்மன் கில் தலைமையில் இந்த வெற்றி பெற உதவிய பயிற்சியாளர்கள் மற்றும் உறுப்பினருக்கு வாழ்த்துக்கள்”
இதையும் படிங்க: இந்த போட்டியில் தோற்றாலும்.. உண்மையில் இதை நெனச்சா பெருமையா இருக்கு – பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி
“உலகின் எந்த பகுதிகளும் இந்த இந்திய அணியை சிராஜ் கீழே விட்டதில்லை. பார்ப்பதற்கு அவ்வளவு விருந்தாக அமைந்தது. வெல்டன் ஆகாஷ் தீப், பிரசித், ஜெய்ஸ்வால், சிராஜ், கில். வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரிசப் பண்ட், ஆகியோரிடம் இருந்து இது ஒரு சிறப்பான தொடர். இந்த இளம் அணியிடமிருந்து நிறைய சீரான செயல்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. பிசிசிஐ” என்று பாராட்டியுள்ளார்.