இக்கட்டான வேளையில் உதவி கேட்ட ரெய்னா. 10 நிமிடத்தில் செய்து முடித்த சோனு சூட் – வைரலாகும் பதிவு

Sonu
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த சில வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, சில தினங்களுக்கு முன்பு நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து அணி வீரர்களும் தங்களது வீட்டிற்கு சென்று வருகின்றனர். இதனையடுத்து தனது சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்திற்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா, கடந்த ஆறாம் தேதி ட்விட்டரில், தனது அத்தைக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாக கூறி உதவி கேட்டு பதவிட்டிருந்தார்.

Raina

- Advertisement -

மேலும் அந்த ட்வீட்டில் அவர் உத்திர பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்தையும் டேக் செய்திருந்தார். அவருடைய இந்த ட்வீட்டைக் கண்ட சமூக ஆர்வலரும், பாலிவுட் நடிகருமான சோனு சூட், பத்து நமிடத்தில் உங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வந்து சேரும். மேலும் விவரங்களை தெரியப்படுத்துங்கள் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே ரெய்னாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டரை அந்த மாநிலத்தில் உள்ள தனது கொரானா மீட்புக் குழுவின் மூலம் வழங்கியிருக்கிறார் சோனு சூட்.

இதனை தொடர்ந்து அந்த ட்வீட்டில் மீண்டும் பதிவிட்ட ரெய்னா, சோனு பாய் இவ்வளவு உதவிகளை செய்த உங்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். ரெய்னாவின் இந்த ட்வீட்டானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சுரேஷ் ரெய்னாவிற்கு தக்க சமயத்தில் உதவிய சோனு சூட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் கொரானா தாக்கத்தின் காரனமாக முடக்க நிலை அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்காக நிறைய உதவிகளை செய்தார் சோனுசூட். அதற்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன.

அவருடைய அந்த உதவிகளை கண்ட ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அவரை கவுரவிக்கும் விதமாக தங்களுடைய போயிங் 737 விமானத்தில் சொனு சூட்டின் புகைப்படத்தை அச்சடித்திருந்தது. தற்போது கொரானாவின் இரண்டாம் அலையால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்திலும், அவர்களுக்கு மிகப் பெரிய உதவிகளை செய்து வருகிறார் சோனு சூட்.

Advertisement