தென்னாபிரிக்க வீரருக்கு கொரோனா உறுதியானது. அவரே வெளியிட்ட கண்ணீர் பதிவு – வைரலாகும் ட்வீட்

RSA
- Advertisement -

கரோனா வைரஸ் பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், முக்கிய தலைவர்கள் என பலரையும் பாதித்துள்ளது. இங்கிலாந்து பிரதமர், இத்தாலியின் கவர்னர்கள், அமெரிக்க அதிபரின் சொந்த உடை வடிவமைப்பாளர் என பலரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்னர் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார்.

Solo

- Advertisement -

அதன் பின்னர் அயர்லாந்தை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடிய கிரிக்கெட் வீரர் சோலோ நிக்வேனி என்பவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளாகி இருந்தது.
கணையம், சிறுநீரகம் போன்றவை செயலிழந்து விட்டது. இந்நிலையில் இந்த நேரத்தில் தான் அவருக்கு காரணம் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் கண்ணீர் மல்க தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை செய்துள்ளார். அந்த பதிவில்…

கடந்த ஆண்டு எனக்கு கில்லன் பார் சின்ட்ரோம் நோய் வந்தது. கடந்த ஒரு வருடமாக இதனை எதிர்த்துப் போராடி வருகிறேன். கிட்டத்தட்ட பாதியைக் கடந்து விட்டேன். எனக்கு காசநோயும் உள்ளது. மேலும், எனது கணையம் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டது. இப்போது கரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனையில் உறுதி ஆகியுள்ளது.

இதெல்லாம் எனக்கு மட்டுமே நடக்கிறது என்று தெரியவில்லை என்று சமீபத்திய பதிவு செய்துள்ளார் சோலோ நிக்கோலஸ். மேலும் இவரை சமீபத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement