விராட் கோலியை தூக்கினால் அது முட்டாள்தனமான முடிவாக அமையும் – சோயிப் அக்தர்

Akhtar
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது. நாளை இந்த தொடரின் டி20 போட்டிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் குறித்து பல சர்ச்சைகள் வந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அக்தர் இந்திய அணியின் கேப்டன் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக கோலி சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். அவருக்குத் தேவை சிறந்த பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு இரண்டும் சரியாக அமைந்தால் அவர் அணியாக சிறப்பாக வழிநடத்துவார்.

Kohli

அதே சமயம் ரோஹித்தும் மும்பை அணிக்காக அவர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என்றே நான் கருதுகிறேன். இருந்தாலும் கோலியை நீக்கினால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

Advertisement