சேப்பலால் நிராகரிக்கப்பட்டு, தோனியால் கண்டுக்கப்பட்ட பொக்கிஷம் தீபக் சாகர் – நெகிழ்ச்சி பதிவு

Chahar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹர் சிறப்பாக செயல்பட்டார். அவர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி எளிதாக வங்கதேச அணியை வீழ்த்தியது.

Chahar-1

- Advertisement -

மேலும் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் இந்த போட்டியின் மூலம் தீபக் சாகர் படைத்தார். இந்நிலையில் தீபக் சாகரின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்து வந்த பாதை குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 2008 ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்டோர் ராஜஸ்தான் அணிக்காக விளையாட முற்பட்ட தீபக் சா்கரை கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி அற்றவர் என்று கூறி ராஜஸ்தான் அணிக்கு அப்போதைய அகாடமி இயக்குனர் பதவியில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல் அவரது வாய்ப்பினை மறுத்தார்.

அதன் பின்னர் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட சாகர் தனது பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்த தொடங்கி 2010 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டியில் அறிமுகமாகி உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்திக் கொண்டிருந்தார். அதன்பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு சையது முஷ்டாக் அலி 20 போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சஹர் அதற்கு அடுத்து 2019 ஆம் ஆண்டும் தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாடினார்.

அந்த தொடரிலும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளராக வலம் வந்தார். அதே ஆண்டு ஒரு போட்டியில் தொடர்ந்து 2 நோ பால் வீசியதால் தோனியிடம் திட்டு வாங்கியது போன்ற வீடியோ வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் ஒரு கேப்டனாக தான் தோனி என் மீது கோபப்பட்டார். முக்கியமான சமயத்தில் நான் இரண்டு நோ பால் வீசியதால் அவர் என் மீது கோபப்பட்டார். மேலும் ஈரப்பதமான மைதானத்தில் பந்தினை எவ்வாறு பிடித்து வீசுவது என்பது போன்ற பல ஆலோசனைகளை வழங்கினார்.

- Advertisement -

chahar

இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைனையும் கூறி எனக்கான முக்கியத்துவத்தை அளித்து என்னை அவர் தொடர்ந்து ஆதரித்து வந்ததால் என்னால் சிறப்பாக அந்த தொடரில் பந்துவீச முடிந்தது அவரது வழிகாட்டுதலின்படி நான் தற்போது சிறப்பாக பந்துவீசி வருகிறேன் என்று தீபக் சஹர் கூறினார்.

Chahar

அதன் பின்னர் இந்திய t20 அணியிலும் அவரின் திறமைக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வரும் சாகர் தற்போது 7 டி20 போட்டிகளிலும் மற்றும் 1 ஒருநாள் போட்டியிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பையில் அவர் இடம்பெற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement