- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மாவை அப்படி பார்த்து நாங்களும் கலங்கிட்டோம்.. உ.கோ வென்ற இந்திய வீராங்கனை பேட்டி

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் விளையாடிய இந்தியா லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் வென்ற இந்தியா செமி ஃபைனலுக்கு சென்று ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அசத்தியது.

அப்போட்டியில் 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா அடித்த 338 ரன்களை இந்தியா திருப்பி அடித்தது. அதனால் ஐசிசி உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. கடைசியாக தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

கலங்கிய ரோஹித்தை பார்த்து:

அந்த வெற்றி கோடிக்கணக்கான இந்திய மக்களையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக நவி மும்பையில் நடைபெற்ற அத்தொடரின் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா போன்ற பலரும் நேராக வந்து இந்திய மகளிரணி ஆதரவளித்தனர். குறிப்பாக ரோஹித் சர்மா தம்முடைய மனைவியுடன் வந்து இந்திய அணிக்கு ஆதரவளித்தார்.

இறுதியில் இந்தியா கோப்பையை வென்றதைப் பார்த்த ரோஹித் வானத்தைப் பார்த்து கலங்கிய கண்களுடன் கைதட்டி மகளிரணியை பாராட்டினார். 2023 உலகக் கோப்பையில் அவரது தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தொடர்ச்சியான 10 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு சென்றது. துரதிஷ்டவசமாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கலங்கிய பெண்கள் அணி:

அதனால் 2011 போல சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. குறிப்பாக சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் விளையாடிய ரோஹித் சர்மா தோல்வியை சந்தித்ததால் மைதானத்திலேயே கண்கலங்கி அழுதார். அப்படிப்பட்ட நிலையில் தம்மால் வெல்ல முடியாத உலகக் கோப்பையை வென்றதை நினைத்து ரோஹித் கலங்கிய கண்களுடன் பாராட்டினார்.

இதையும் படிங்க: சுப்மன் கில் மாதிரி அவரையும் கடல்ல தூக்கி போட்டோம்.. இல்லனா திறமை வெளியே வந்துருக்காது.. கம்பீர் பேட்டி

இந்நிலையில் ரோஹித்தை பார்த்து தாங்களும் அன்றைய நாளில் கலங்கி விட்டதாக இந்திய வீராங்கனை ஸ்னே ராணா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் விளையாடிய இறுதிப்போட்டியை பார்க்க ரோஹித்தும் வந்திருந்தார். நாங்கள் கோப்பையை வென்ற பின் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கலங்கினார். அவரை அப்படி பார்த்து நாங்களும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கலங்கினோம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -