அவங்களோட எங்களை கம்பேர் பண்ணாதீங்க.. அதை செஞ்சா ஆர்சிபி வரலாறு படைக்கும்.. கேப்டன் மந்தனா பேட்டி

- Advertisement -

மகளிர் ஐபிஎல் டி20 தொடர் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் எலிமினேட்டர் போட்டியில் வலுவான நடப்புச் சாம்பியன் மும்பையை தோற்கடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத அந்த அணி இம்முறை சிறப்பாக விளையாடி முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது ஆர்சிபி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த வலுவான டெல்லியை மாபெரும் இறுதிப் போட்டியில் பெங்களூரு எதிர்கொள்கிறது. இந்த 2 அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் ஃபைனலில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை முத்தமிடப் போவது யார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக பெங்களூரு கோப்பையை வெல்லுமா? என்பது கோடிக்கணக்கான ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:
ஏனெனில் ஆடவர் ஐபிஎல் தொடரில் 2008 முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி ஆகியோரின் தலைமையில் அதிகபட்சமாக ஃபைனல் வரை சென்ற பெங்களூரு கோப்பையை வெல்ல முடியவில்லை. அத்துடன் அழுத்தமான தருணங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள பெங்களூரு வெற்றியையும் எதிரணிக்கு பரிசளித்து வருவது வாடிக்கையாகி விட்டது.

அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் உங்களால் கோப்பையை வெல்ல முடியாது என்ற மிகப்பெரிய கிண்டல்களை கடந்த பல வருடமாக ஆர்சிபி அணி சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்த கிண்டல்களை மாற்றி கோப்பையை வெல்வீர்களா என்று மகளிர் அணி கேப்டன் ஸ்மிருத்தி மந்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆடவர் ஆர்சிபி அணியுடன் எங்களை ஒப்பிடாதீர்கள் என்று மந்தனா பதிலளித்தார்.

- Advertisement -

மேலும் பைனல் நாளில் சிறப்பாக விளையாடினால் ஆர்சிபி கோப்பையை வென்று வரலாறு படைக்கும் என்று தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் இந்த வருடம் எங்களுடைய அணியை இணைப்பதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆண்கள் அணிக்கு என்ன நடந்தது என்பது சில நேரங்களில் எங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. அதே சமயம் நாங்கள் மகளிர் தொடரில் 2 சீசன்கள் மட்டுமே விளையாடிள்ளோம். அதனால் அதிகப்படியான மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்”

இதையும் படிங்க: பாபர் அசாம் மற்றும் விராட் கோலியை மிஞ்சி டி20 கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய அயர்லாந்து கேப்டன் – விவரம் இதோ

“எனவே உண்மையில் ஆண்கள் அணியுடன் என்ன நடந்தது என்பதை தொடர்புப்படுத்த விரும்பவில்லை. எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் கற்றுக் கொடுத்த பாடமாகும். வெற்றி என்பது அன்றைய நாளில் சிறப்பாக விளையாடுவதைப் பொறுத்து அமையும். எனவே நாளை யார் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்.

Advertisement