நான் எதிர்கொண்டதிலேயே இவர்தான் கடினமான பவுலர் – ஸ்மித் யாரை சொல்லிருக்காரு பாருங்க

Smith
- Advertisement -

கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் நடைபெறவில்லை. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரும், இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரில் தற்போது வரை எந்தவொரு இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

Smith

- Advertisement -

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தில் முன்னணி வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவது, சக வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதே போன்று இணையத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது கிரிக்கெட் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் நீங்கள் சந்திக்க மிகவும் கஷ்டப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டனர்.

amir

அதற்கு பதிலளித்த ஸ்மித் : பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் தான் நான் சந்திப்பிலேயே மிகவும் திறமையான பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன். அவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள எனக்கு சற்று கடினமாக இருக்கும் என்று ஸ்மித் கூறினார். பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மாதம் 2010ஆம் ஆண்டு மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் தடை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன் பின்னர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பிய அவர் 36 டெஸ்ட் போட்டியில் விளையாடி தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Smith 1

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர வீரர் ஸ்மித் எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு மைதானத்தில் திறம்பட வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வீரர் ஆவார். மேலும் இவரது பேட்டிங் டெக்னிக் முறையானதாக இல்லை என்றாலும் பந்தினை கணிப்பதில் வல்லவரான இவர் வேகப்பந்து வீச்சாளர்களை மிகவும் ஈசியாக எதிர்கொண்டு வருகிறார். மேலும் அவரது விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement