28 வயதியிலே ஓய்வை அறிவித்த இளம் இந்தியவீரர். வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி – அமெரிக்கா செல்ல திட்டம்

Smit-1

2012ஆம் நடைபெற்ற யு19 கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்த ஸ்மித் பட்டேல், இந்தியாவில் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கரீபியன் லீக்கில், பார்படாஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்மித் பட்டேல். வெளிநாட்டு உள்ளூர் தொடரில் ஒரு இந்திய வீரர் விளையாட வேண்டுமென்றால், முதலில் அவர்கள் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்பதே இந்தியாவில் விதியாக இருக்கிறது.

Smit

இந்நிலையில் பார்படாஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள ஸ்மித் பட்டேல் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக ஒரு அறிவப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவிற்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். என்னுடைய ஓய்வு குறித்து எழுத்துப் பூர்வமான படிவங்களை பிசிசிஐயிடம் சமர்பித்து, அவர்களிடம் இருந்து அனுமதியும் வாங்கிவிட்டேன். எனவே இந்திய கிரிக்கெட்டில் என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. இது என்னுடைய வாழ்க்கையின் இரண்டாவது தொடக்கமாக கருதுகிறேன்.

- Advertisement -

19 வயதில் இந்திய அணிக்கு விளையாடி அதற்குப் பிறகு இந்திய உள்ளூர் தொடர்களில் நான்கு அணிகளில் விளையாடியும் எனக்கான விக்கெட் கீப்பிங் இடம் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தேன். இதனால் யாரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அமெரிக்கன் சூப்பர் லீக்கில் விளையாட இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளேன்.

Smit 2

இனிவரும் காலங்களில் ஒரு மாதம் மட்டுமே இந்தியாவிற்கு பயிற்சி மேற்கொள்ள வருவேன் என்று கூறிய அவர், இந்தியாவில் 12 வருடங்களாக கிரிக்கெட் விளையாடிவிட்டு உடனடியாக இந்த முடிவை எடுத்தது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது என்றும் கூறினார். 28 வயதேயான ஸ்மித் பட்டேல், இந்திய யு19 அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

- Advertisement -

Smit 3

குஜராத் அணியில் ஏற்கனவே அந்த அணியின் கேப்டனாக இருந்த பார்த்தீவ் பட்டேலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால், அந்த அணியில் ஸ்மித் பட்டேலுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார். மேலும் அவர், திரிபுரா, கோவா மற்றும் பரோடா ஆகிய மூன்று அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement